0,00 INR

No products in the cart.

பலன் தரும் ஸ்லோகம்

எதிர்மறை சக்திகள் அகல…

‘விளக்கினை ஏற்றி வெளியை அறிமின்
விளக்கினின் முன்னை வேதனை மாறும்
விளக்கை விளக்கும் விளக்குடை யார்கள்
விளக்கில் விளங்கும் விளக்காவர் தாமே.’

– திருமுறை

எனும் ஸ்லோகத்தை காலை, மாலை தீபம் ஏற்றும்போது மூன்று அல்லது ஒன்பது முறை சொல்லி, தீபம் ஏற்றி வந்தால் வீட்டில் உள்ள எதிர்மறை சக்திகள் அகன்று, சுபிட்சம் பெருகும்.

– அம்பிகா சஞ்சீவ், சென்னை

பாவங்கள் தீர…

‘பாபம் தாபம் வ்யாமி மாதிம் ச தைர்யம்
பீதிம் க்லேசம் த்வம் ஹராஸு த்வதன்யம்
த்ராதாரம் நோ வீக்ஷ ஈசாஸ்த ஜனார்த்தே
கோராத் கஷ்டாதுத்தராஸ்மாந் நமஸ்தே.’

– குரு தத்தாத்ரேய பஞ்சரத்னம்

பொருள் : பாவத்தையும், தாபத்தையும், ரோகங்களையும் மனக்கவலையையும், ஏழ்மையையும், சத்ரு பயத்தையும், துக்கத்தையும் நீக்கியருள வேண்டும். இத்துதியை மூன்று முறை பாராயணம் செய்தால் அனைத்து பாவங்களும் அகலும்.

சர்வ மங்கலம் உண்டாக…

‘அன்னபூர்ணே ஸதாபூர்ணே,
சங்கர ப்ராண வல்லபே
ஞான வைராக்ய ஸித்யர்த்தம்
பிக்ஷாம் தேஹி ச பார்வதி’

– ஜகத்குரு ஸ்ரீ ஆதிசங்கரர்

பொருள் : ‘அன்னம் நிறைந்தவளே, எப்போதும் பூர்ணமாக இருப்பவளே, சங்கரனுடைய பிராண நாயகியே, ஹே பார்வதியே… ஞானம், வைராக்கியம் இவை உண்டாவதற்காக பிச்சைக் கொடு’ என்று அன்னையை தியானித்து வழிபட, சங்கடங்கள் யாவும் நீங்கி, சர்வ மங்கலங்களும் வீட்டில் உண்டாகும். தினமும் இந்த ஸ்லோகத்தைப் பாடி ஸ்ரீ அன்னபூரணியை வழிபடுவது விசேஷ பலன்களைப் பெற்றுத் தரும்.

ஐஸ்வர்யம் பெருக…

‘ஓம் குஞ்ஜாபலா கல்பித ஹாரரம்யாம்
ச்ருத்யோ: சிகண்டம் சிகினோ வஹந்தீம்
கோதண்டபாணௌ தததீம் கராப்யாம்
கதஸதவல்காம் சபரீம் ஸ்மராமி.’

பொருள் : குந்துமணிமாலை அணிந்திருப்பவளும், இரண்டு காதுகளிலும் மயில் தோகையை அணிந்திருப்பவளும், வில், அம்பு இவற்றை தன் இரு கரங்களிலும் ஏந்தியருள்பவளும் இடையில் மரவுரி தரித்திருப்பவளுமான சபரி துர்கா தேவியை தியானிக்கிறேன்.

இத்துதியை செவ்வாய், வெள்ளி, அஷ்டமி தினங்களில் பாராயணம் செய்து வந்தால் வறுமை அகன்று, அஷ்ட ஐஸ்வர்யங்கள் பெருகும்.

– வசந்தா மாரிமுத்து,சென்னை

Stay Connected

261,699FansLike
1,912FollowersFollow
7,330SubscribersSubscribe

Other Articles

வாழவைக்கும் வைத்திய நரசிம்மர்!

0
- ராமசுப்பு ‘ஸ்ரீ நரசிம்மர்’ என்ற சிங்கமுக அவதாரம் தனிச் சிறப்பு வாய்ந்தது. பிறப்பின்றி ஒரு நொடிப்பொழுதினிலே தனது பக்தன் பிரஹலாதனைக் காப்பாற்றவும், அதேசமயம் ‘பகவான் விஷ்ணு அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்து இருக்கிறார்’ என்று...

நலம் பெருக்கும் நவநாயகர்!

- கே.சூரியோதயன் சூரியன் காசியப முனிவரின் குமாரர். ஒளிப்பிழம்பானவர். நவக்கிரகங்களில் முதன்மை ஸ்தானம் பெற்றவர். சிம்ம ராசிக்கு அதிபதி. நவக்கிரகங்களில் நடுவில் அமர்ந்திருப்பவர். திக்கு - கிழக்கு, அதிதேவதை - அக்னி, ப்ரத்யதி தேவதை - ருத்திரன்,...

வாழ்வைக் கடைத்தேற்றும் பஞ்ச நாமங்கள்!

- எ.எஸ்.கோவிந்தராஜன் ‘மனிதன் தம்மை நோக்கி ஓர் அடியாவது எடுத்து வைக்க மாட்டானா?’ என கடவுள் ஆவலோடு நமக்காகக் காத்துக்கொண்டிருக்கிறாராம். அப்படி நாம் கடவுளை நோக்கிச் செல்வதற்கான முதல் படி அவனது திருநாமங்களை உச்சரிப்பதுதான்....

பிரார்த்தனை பரிகாரத் தலங்கள்!

0
- டி.ஜெயலட்சுமி பூர்வஜென்ம தோஷ நிவர்த்தி வழிபாடு! சென்னை, தங்கசாலையையும், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சாலையையும் இணைக்கும் இடத்தில் உள்ளது சின்னக்கடை மாரியம்மன் என்ற ரேணுகா தேவி ஆலயம். இந்தக் கோயில் சுமார் 250 ஆண்டுகளுக்கு...

வைகுந்தத்துக்கு வழிகாட்டிய வள்ளல்!

1
- ஆர்.வி.பதி ‘வைணவ சம்பிரதாயத்தில் உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்ற பாகுபாடு கூடாது. வைணவன் என்பவன் பெருமாளுக்கு சேவை செய்பவன்’ என்பது ஸ்ரீ ராமானுஜரின் கருத்து. இந்தக் கருத்தினை தனது வாழ்வில் பல செயல்களின் மூலம்...