0,00 INR

No products in the cart.

பள்ளியறை பூஜை பலன்கள்!

– எம்.ஏ.நிவேதா

சிவாலயங்களில் இரவு நேரத்தில் கோயில் நடை சாற்றப்படுவதற்கு முன் நடைபெறுகின்ற பூஜை, பள்ளியறை பூஜை ஆகும். அதாவது, சுவாமியையும் அம்பாளையும் பள்ளியறை ஊஞ்சலில் ஒருசேர அமர வைத்து ஆராதனை செய்து தாலாட்டுப் பாடி பூஜிப்பது ஆகும்.

பள்ளியறை பூஜைக்கு பல்லக்கில் ஈசன் வலம் வரும்போது சிவபுராணம், பதிகங்கள் பாடி வர வேண்டும். இதை தரிசித்தாலே வளமான வாழ்க்கையை நாம் அமைக்கின்றோம் என்று அர்த்தம். பள்ளியறை பூஜைக்கு பல்லக்கு தூக்கி ஈசனைச் சுமந்து வரும் பாக்கியம் எவருக்குக் கிட்டுகின்றதோ, அவர்கள் மறுபிறவியில் பொறியியல் வல்லுநர்களாகவும், பல மாடிக் கட்டடங்களுக்குச் சொந்தக்காரர்களாகவும், பல ஆயிரம் கோடி ரூபாய்க்கு அதிபதியாகவும் மாறுவார்கள் என்பது நம்பிகை. பள்ளியறை பூஜையில் யார் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம். இனி, வாரத்தின் எந்த நாளில் பள்ளியறை பூஜையில் கலந்துகொள்ள, என்ன பலன் கிடைக்கும் என்பதைக் காண்போம்.

திங்கள் : திங்கட்கிழமை அன்று பள்ளியறை பூஜைக்குரிய பொருட்களை தானம் செய்து, அதில் கலந்து கொள்பவர்கள், அதன் பிறகு தமது வாழ்க்கையில் மகத்தான திட்டங்களைத் தங்கு தடையின்றி செயல்படுத்தி வெற்றி காண்பார்கள்.

செவ்வாய் : ஆயில்யம், கேட்டை, மூலம், பூராடம் நட்சத்திரங்களில் பிறந்த பெண்களுக்கு மிகவும் சிரமத்தின்பேரிலேயே வாழ்க்கைத் துணை அமையும். எனவே, இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ஒரு வருடம் வரை தினமும் பள்ளியறை பூஜையில் கலந்துகொள்ள வேண்டும். ஆயில்யம் நட்சத்திரமும், செவ்வாய்க்கிழமையும் கூடி வரும் நாளன்று தமது வருமானத்தில் பள்ளியறை பூஜைக்குத் தேவையான பொருட்களை காணிக்கையாகத் தந்து, அவசியம் இந்த பூஜையில் கலந்துகொள்ள வேண்டும்.

புதன் : அரசு மற்றும் தனியார் துறையில் பதவி உயர்வுக்குக் காத்திருப்பவர்கள் புதன்கிழமையன்று பள்ளியறை பூஜைக்குத் தேவையான பொருட்களை வாங்கித் தருவதோடு, கட்டாயம் அதில் கலந்துகொள்ள வேண்டும்.

வியாழன் : அனைத்து விதமான சித்திகளும் கிடைக்க பலர் பல பிறவிகளாக முயற்சி செய்துகொண்டே இருக்கின்றார்கள். அவர்கள் ஒரு வருடம் வரை தினமும் பள்ளியறை பூஜையில் கலந்துகொள்ள வேண்டும். மேலும், அனுஷம் நட்சத்திரமும் வியாழக்கிழமையும் கூடி வரும் நாட்களில் பள்ளியறை பூஜைக்குத் தேவையான பொருட்களை தம்மால் முடிந்த அளவுக்கு வாங்கித் தருவதோடு, அதில் கலந்து கொண்டு மனதார வேண்டிக்கொள்ளவும் வேண்டும்.

வெள்ளி : கணவனுடைய பல கால நோய்கள் தீர, அவனுடைய மனைவி வெள்ளிக்கிழமை பள்ளியறை பூஜையை சிறப்பிக்க தம்மால் ஆன முயற்சியில் ஈடுபட வேண்டும்.

சனி : நல்ல புத்திசாலி மகனையோ, மகளையோ வாரிசாகப் பெற விரும்பினால் சனிக்கிழமையன்று பள்ளியறை பூஜையில் கலந்து கொள்வதோடு, அதற்குத் தேவையான பொருட்களை காணிக்கையாக வாங்கித் தர வேண்டும்.

ஞாயிற்றுக்கிழமை : பிரிந்த கணவனோ அல்லது மனைவியோ மீண்டும் சேரவும், காணாமல் போய் பல ஆண்டுகள் வரை என்ன ஆனார்கள் என்பதை அறியவும், அறிந்த பின்னர் திரும்பி வரவும் மூன்றாண்டுகள் வரை தினமும் பள்ளியறை பூஜையில் கலந்துகொள்ள வேண்டும். அசுபதியும் ஞாயிற்றுக்கிழமையும் கூடி வரும் நாட்களில் பள்ளியறை பூஜைக்குத் தேவையான பூக்கள், பால், நைவேத்தியம் போன்றவற்றை காணிக்கையாக வாங்கித் தர வேண்டும்.

ள்ளியறை பூஜைக்கு எண்ணெய், நெய், மின் விளக்கு தானம் செய்பவர்கள், அடுத்த பிறவியில் பல ஆயிரக்கணக்கானவர்களுக்கு கல்வி தரும் பாக்கியத்தைப் பெறுவார்கள். பள்ளியறை பூஜைக்கு பூக்கள் கட்டித் தருபவர்கள் மறுபிறவியில் அதிக சம்பளம் பெறும் வேலையில் அமர்வர். அவர்களது மகன், மகள் மற்றும் பேரன் பேத்திகளும் அதிக சம்பளம் பெறும் வேலையில் இருப்பார்கள். குறைந்த பட்சம் ஐந்து ஆண்டுகள் வரை இப்படிச் செய்தால் மட்டுமே இந்தப் பலன் கிட்டும்.

பள்ளியறை பூஜைக்கு பால், நைவேத்தியங்கள் செய்துக் கொடுப்பவர்கள், பள்ளியறை பூஜை நிறைவடைந்த பின்னர், ஏழைகளுக்கு தானமாக நைவேத்தியத்தைத் தருபவர்கள் ஒழுக்கமும் பக்தியும் நிறைந்த குழந்தைகளை இப்பிறவியிலும், மறுபிறவியிலும் பெறுவர். பள்ளியறை பூஜையில் கர்ப்பிணிப் பெண்கள் கலந்து கொண்டு, பூஜையின் முடிவில் பசுவுக்குப் பழங்கள் கொடுத்து வந்தால் சுகப்பிரசவம் ஏற்படும். நைவேத்தியப் பாலை பலருக்கும் தந்தால் வலியில்லாத பிரசவம் நிகழும். குழந்தை பிறக்கும் தருணத்தில் இறை சிந்தனை உண்டாகும். பள்ளியறை பூஜையிலும், அதன் நிறைவுப் பகுதியிலும் அன்னதானம் செய்பவர்கள் தொழிலில் அமோக வளர்ச்சியை காண்பர். பல மடங்கு லாபம் அவர்களைத் தேடி வரும். பள்ளியறை பூஜைக்கு எண்ணெய் மற்றும் நெய் தொடர்ந்து தருபவர்களுக்கு முதுமைக் காலத்தில் கண் சார்ந்த வியாதிகள் ஒருபோதும் வராது.

வெகு காலமாக திருமணம் நடைபெறாமல் தாமதப்படும் இளைஞர்கள், இளம் பெண்கள் பள்ளியறை பூஜையில் ஒரு வருடத்திற்குக் குறையாமல் கலந்து கொள்வதன் மூலமாக அவர்களுக்கு இனிமையான மண வாழ்க்கை அமையும். வேலை அல்லது தொழில் செய்து வருபவர்கள் ஒரு வருடம் வரை தினமும் பள்ளியறை பூஜையை தரிசிப்பதன் மூலமாக, மூன்றாவது நாளில் இருந்து அல்லது மூன்றாவது வாரத்தில் இருந்து வேலையில் உண்டான மந்தம் விலகி தொழிலில் படிப்படியான வளர்ச்சியைக் காணலாம்.

பள்ளியறை பூஜை நடைபெறாத ஆலயங்களில் பள்ளியறை கட்டுவதும், மீண்டும் பள்ளியறை பூஜையைத் துவங்குவதும் பெரும் புண்ணியத்தைத் தரும். யார் இதைச் செய்கின்றார்களோ, அவர்கள் மற்றும் அவர்களுடைய அடுத்த பதினான்கு தலைமுறையைச் சேர்ந்தவர்கள் இனிமையான இல்லறத்தை தமது வாழ்நாள் முழுவதும் பெறுவார்கள் என அகத்தியர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Stay Connected

261,699FansLike
1,912FollowersFollow
7,330SubscribersSubscribe

Other Articles

வாழவைக்கும் வைத்திய நரசிம்மர்!

0
- ராமசுப்பு ‘ஸ்ரீ நரசிம்மர்’ என்ற சிங்கமுக அவதாரம் தனிச் சிறப்பு வாய்ந்தது. பிறப்பின்றி ஒரு நொடிப்பொழுதினிலே தனது பக்தன் பிரஹலாதனைக் காப்பாற்றவும், அதேசமயம் ‘பகவான் விஷ்ணு அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்து இருக்கிறார்’ என்று...

நலம் பெருக்கும் நவநாயகர்!

- கே.சூரியோதயன் சூரியன் காசியப முனிவரின் குமாரர். ஒளிப்பிழம்பானவர். நவக்கிரகங்களில் முதன்மை ஸ்தானம் பெற்றவர். சிம்ம ராசிக்கு அதிபதி. நவக்கிரகங்களில் நடுவில் அமர்ந்திருப்பவர். திக்கு - கிழக்கு, அதிதேவதை - அக்னி, ப்ரத்யதி தேவதை - ருத்திரன்,...

வாழ்வைக் கடைத்தேற்றும் பஞ்ச நாமங்கள்!

- எ.எஸ்.கோவிந்தராஜன் ‘மனிதன் தம்மை நோக்கி ஓர் அடியாவது எடுத்து வைக்க மாட்டானா?’ என கடவுள் ஆவலோடு நமக்காகக் காத்துக்கொண்டிருக்கிறாராம். அப்படி நாம் கடவுளை நோக்கிச் செல்வதற்கான முதல் படி அவனது திருநாமங்களை உச்சரிப்பதுதான்....

பிரார்த்தனை பரிகாரத் தலங்கள்!

0
- டி.ஜெயலட்சுமி பூர்வஜென்ம தோஷ நிவர்த்தி வழிபாடு! சென்னை, தங்கசாலையையும், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சாலையையும் இணைக்கும் இடத்தில் உள்ளது சின்னக்கடை மாரியம்மன் என்ற ரேணுகா தேவி ஆலயம். இந்தக் கோயில் சுமார் 250 ஆண்டுகளுக்கு...

வைகுந்தத்துக்கு வழிகாட்டிய வள்ளல்!

1
- ஆர்.வி.பதி ‘வைணவ சம்பிரதாயத்தில் உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்ற பாகுபாடு கூடாது. வைணவன் என்பவன் பெருமாளுக்கு சேவை செய்பவன்’ என்பது ஸ்ரீ ராமானுஜரின் கருத்து. இந்தக் கருத்தினை தனது வாழ்வில் பல செயல்களின் மூலம்...