0,00 INR

No products in the cart.

பறிச்சதா? கொறிச்சதா?

– ஆர்.வி.ராமானுஜம்

கா பெரியவர் ஒருமுறை தாம் செய்த யாத்திரையின்போது கிராமம் ஒன்றில் தங்க நேர்ந்தது. அங்கே மடத்துக்கு சொந்தமான நிலத்தில் அந்த வருடம் அமோகமாக கடலை விளைந்திருந்தது. நிலத்தை குத்தகை எடுத்தவர் விளைந்த அவ்வளவு நிலக்கடலையையும் அறுவடை செய்து விற்று விட்டார். மகாபெரியவர் தரிசனத்தின்போது, அந்தத் தகவலை அவர் மகிழ்வோடு குறிப்பிட்டார்.

மகா பெரியவரை தரிசனம் செய்ய வந்திருந்த அனைவரும் அவருக்குப் படைப்பதற்காக பலவிதமான பழங்களுடனும், முந்திரி, கற்கண்டு போன்றவற்றுடனும் காத்துக் கொண்டிருந்தனர். அவை எதையும் ஏறெடுத்தும் பார்க்கா மகா பெரியவர், மடத்துக்கு சொந்தமான நிலத்தில் விளைந்ததாகச் சொன்ன கடலையில் ஒரு கைப்பிடியை ஆசையாகக் கேட்டார்.

அதைக்கேட்ட குத்தகை விவசாயி ஆடிப் போய்விட்டார். மகா பெரியவர் இப்படிக் கேட்பார் என்று அவர் மட்டுமில்லை, யாருமே எதிர்பார்க்கவில்லை. அதேசமயம், அந்தக் குத்தகை விவசாயி விளைந்த கடலை அனைத்தையும் விற்று விட்டதால் அவர் கைவசமும் கொஞ்சம் கடலை கூட இல்லை. ‘இது என்ன சோதனை?’ என்று அவர் தவித்தாலும், அவரது மனதுக்குள் ஒரு உபாயம் தோன்றியது. ‘இதோ கொஞ்ச நேரத்தில் கொண்டு வருகிறேன் ஸ்வாமி’ என்று ஓடினார். திரும்பி வரும்போது, ஒரு கைப்பிடி இல்லை… பல கைப்பிடி அளவுக்கு கடலையை அவர் கொண்டு வந்தார்!

அதில் ஒன்றை எடுத்துப் பார்த்தார் பெரியவர். அந்தக் கடலையின் ஒரு ஓரமாய் எலி கொறித்தது போன்று இருந்தது. உடனே, அந்த நிலக் குத்தகைதாரரிடம், ‘இது பறிச்சதா? கொறிச்சதா?’ என்று கேட்டார் பெரியவர்!

கா பெரியவரின் இந்தக் கேள்வியில் இலக்கிய நயம் மட்டுமில்லை, இதயத்தின் நயமும் இருந்தது என்பது போகப்போகத்தான் அனைவருக்கும் விளங்கத் தொடங்கியது.

கடலையை முறத்தில் எடுத்து வந்த அந்தக் குத்தகை நபர், பெரியவர் முன்பு திணறியபடி நின்றார். பிறகு, அந்தக் கடலையை வயலில் உள்ள எலி வளைகளில் இருந்து சேகரித்து எடுத்து வந்ததை மிகுந்த பயத்துடன் மகா பெரியவரிடம் கூறினார்.

அதைக்கேட்ட மகாபெரியவர் முகத்தில் மெல்லிய சலனம் தென்பட்டது. பிறகு, பெரியவர் பேச ஆரம்பித்தார். ‘ஒரு துறவிக்கு ஆசையே கூடாது. அது அற்ப கடலைப்பயிர் மீதுதான் என்றாலும், அதிலும் சில சமயங்களில் இதுபோல சோதனைகள் ஏற்பட்டு விடுகின்றன. எலி ஒரு பிராணி! வளைகளில் கடலைகளைச் சேமித்து வைத்துக்கொண்டு, அறுவடைக்குப் பிறகான நாட்களில், அந்த எலி அதைச் சாப்பிட்டுதான் உயிர் வாழ்ந்தாக வேண்டும். வயலுக்குச் சொந்தக்காரனுக்கு வேண்டுமானால், அது எலியுடைய கள்ளத்தனமாகத் தெரியலாம். அதற்காக அந்த எலிகளுக்கு பாஷாணம் வைத்துக் கொல்லவும் முற்படலாம். ஆனால், அன்பே வடிவான ஒரு துறவி, எலியை ஒரு கள்ளப் பிராணியாகவா கருதுவார்? அதிலும், எலி என்பது பிள்ளையாரின் வாகனம். அவரை வணங்கும்போது, நம் வணக்கம் எலிக்கும் சேர்த்துதான் செல்கிறது. இப்படி, வணங்க வேண்டிய ஒரு ஜீவனின் சேமிப்பில் இருந்து எடுத்து வந்திருந்த கடலையை சாப்பிட முடியவில்லை. மாறாக, இதை எந்த வளையில் இருந்து எடுத்துண்டு வந்தீங்க? அந்த இடம் ஞாபகம் இருக்கா?’ என்று அந்தக் குத்தகைதாரரிடம் கேட்டார். அவரும் அதை ஆமோதித்தார்.

அடுத்த சில நிமிடங்களில், ஒரு முறத்தில் அந்தக் கடலையோடும் இன்னொரு முறத்தில் வெல்லப் பொரியோடும் அந்த இடத்துக்கு பெரியவரே போய் நின்றதுதான் அனைவருக்கும் ஆச்சரியம். வளை துவாரத்துக்கு முன்பு, அதிலிருந்து எடுத்த கடலையோடு, தாம் கொண்டு வந்திருந்த வெல்லப்பொரியையும் வைத்து விட்டு, மன உருக்கமுடன் அவர் பிரார்த்தனை செய்தார். உடனே, வளையின் உள்ளிருந்த எலிகள் வெளியே தைரியமாய் வந்து, பெரியவர் படைத்த விருந்தை அனுபவிக்கத் தொடங்கின! சூழ்ந்து நின்று பார்த்த அனைவருக்கும் ஒரே பரவசம். மெய்சிலிர்ப்பு!

Stay Connected

261,699FansLike
1,912FollowersFollow
7,330SubscribersSubscribe

Other Articles

வாழவைக்கும் வைத்திய நரசிம்மர்!

0
- ராமசுப்பு ‘ஸ்ரீ நரசிம்மர்’ என்ற சிங்கமுக அவதாரம் தனிச் சிறப்பு வாய்ந்தது. பிறப்பின்றி ஒரு நொடிப்பொழுதினிலே தனது பக்தன் பிரஹலாதனைக் காப்பாற்றவும், அதேசமயம் ‘பகவான் விஷ்ணு அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்து இருக்கிறார்’ என்று...

நலம் பெருக்கும் நவநாயகர்!

- கே.சூரியோதயன் சூரியன் காசியப முனிவரின் குமாரர். ஒளிப்பிழம்பானவர். நவக்கிரகங்களில் முதன்மை ஸ்தானம் பெற்றவர். சிம்ம ராசிக்கு அதிபதி. நவக்கிரகங்களில் நடுவில் அமர்ந்திருப்பவர். திக்கு - கிழக்கு, அதிதேவதை - அக்னி, ப்ரத்யதி தேவதை - ருத்திரன்,...

வாழ்வைக் கடைத்தேற்றும் பஞ்ச நாமங்கள்!

- எ.எஸ்.கோவிந்தராஜன் ‘மனிதன் தம்மை நோக்கி ஓர் அடியாவது எடுத்து வைக்க மாட்டானா?’ என கடவுள் ஆவலோடு நமக்காகக் காத்துக்கொண்டிருக்கிறாராம். அப்படி நாம் கடவுளை நோக்கிச் செல்வதற்கான முதல் படி அவனது திருநாமங்களை உச்சரிப்பதுதான்....

பிரார்த்தனை பரிகாரத் தலங்கள்!

0
- டி.ஜெயலட்சுமி பூர்வஜென்ம தோஷ நிவர்த்தி வழிபாடு! சென்னை, தங்கசாலையையும், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சாலையையும் இணைக்கும் இடத்தில் உள்ளது சின்னக்கடை மாரியம்மன் என்ற ரேணுகா தேவி ஆலயம். இந்தக் கோயில் சுமார் 250 ஆண்டுகளுக்கு...

வைகுந்தத்துக்கு வழிகாட்டிய வள்ளல்!

1
- ஆர்.வி.பதி ‘வைணவ சம்பிரதாயத்தில் உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்ற பாகுபாடு கூடாது. வைணவன் என்பவன் பெருமாளுக்கு சேவை செய்பவன்’ என்பது ஸ்ரீ ராமானுஜரின் கருத்து. இந்தக் கருத்தினை தனது வாழ்வில் பல செயல்களின் மூலம்...