0,00 INR

No products in the cart.

வாழவைக்கும் வைத்திய நரசிம்மர்!

– ராமசுப்பு

‘ஸ்ரீ நரசிம்மர்’ என்ற சிங்கமுக அவதாரம் தனிச் சிறப்பு வாய்ந்தது. பிறப்பின்றி ஒரு நொடிப்பொழுதினிலே தனது பக்தன் பிரஹலாதனைக் காப்பாற்றவும், அதேசமயம் ‘பகவான் விஷ்ணு அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்து இருக்கிறார்’ என்று பிரஹலாதன் கூறியதை மெய்ப்பிப்பதற்காகவும் எடுத்த அவதாரமாகும். ஒரே சமயத்தில் ஹிரண்யகசிபுவிடம் சீற்றத்தையும், பிரஹலாதனிடம் அன்பைக் காட்டியும் தோன்றிய மிக உக்ரமான அவதாரம். பக்தர்களுக்கு அருள்பாலிப்பதிலே, ‘நாளை என்பதே இல்லை நரசிம்மரிடம்’ என்று கூறுவார்கள்.

தெலங்கானா மாநிலம், நல்கொண்டா மாவட்டத்தில் யாதகிரி மலையடிவாரத்தில் அமைந்துள்ளது பஞ்ச நரசிம்மர் திருக்கோயில். திரேதா யுகத்தில் ஒரு சமயம் நரசிம்மரை நேரில் காண வேண்டும் என்று விரும்பிய யாத ரிஷி என்ற முனிவர் தீவிரமாகத் தவமியற்றினார். அவரது தவத்தை மெச்சிய நரசிம்மர் நான்கு முறை அவருக்குக் காட்சி கொடுத்தார். ஆனால், நான்கு முறையும் அவர் தனித்தே காட்சி தந்ததால் திருப்தியடையாத யாத ரிஷி, ஒருமுறையாவது தாயாருடன் காட்சி தர வேண்டுமென்று விரும்பி, ஐந்தாவது முறையாக மீண்டும் தவமியற்றினார். அவரது ஆழ்ந்த தவத்தை மெச்சி ஐந்தாவது முறையாக மகாலட்சுமி தாயாருடன் காட்சி கொடுத்தார் நரசிம்மர். அத்திருக்காட்சியைக் கண்டு மெய்சிலிர்த்து, அவர்களது மலர் பாதம் பணிந்து வணங்கினார் யாத ரிஷி. இப்படி ஐந்தாவது முறையாக ஸ்ரீ நரசிம்மர் காட்சி கொடுத்ததால் இத்தலம், ‘பஞ்ச நரசிம்மர்’ திருத்தலமாகப் போற்றப்படுகிறது.

யாத ரிஷியின் மறைவுக்குப் பிறகு இக்கோயிலில் வழிபாடுகள் நின்றுபோனதால், அக்கோயிலில் இருந்து அருள விரும்பாத ஸ்ரீ நரசிம்மர், தற்போதுள்ள இத்திருத்தலத்தில் குடியேறி விட்டார். முன்பு அருள்பாலித்த கோயிலில்
ஸ்ரீ நரசிம்மர் காணாமல் போனதால், பக்தர்கள் ஸ்ரீ நரசிம்மரைத் தேடி அலைந்தனர். அச்சமயம் ஒரு நாள் அந்த கிராமத்துப் பெண் ஒருத்தியின் கனவில் தோன்றிய நரசிம்மர், தானது இருப்பிடத்தைத் தெரிவித்தார். அதன் பிறகே பக்தர்கள் இத்திருத்தலத்தில் நரசிம்மரை வழிபட்டு வருகின்றனர்.

ங்குள்ள குகைக்குள் நரசிம்மர் சாந்தமாக, அதேசமயம் அகன்ற கண்களுடன், சிங்கப்பல் வெளியே தெரிய, அபய கரத்துடன், சங்கு சக்ரதாரியாய் நின்ற திருக்கோலத்தில் அருள்பாலிக்கிறார். தாயார் மகாலட்சுமியும் அருகே நின்ற கோலத்தில் முகமலர்ந்து காட்சியளிக்கிறார்.

யாதகிரி நகரின் எல்லையில் குன்றின் மேல் இந்த ஆலயம் அமைந்துள்ளது. பழைமையான தோற்றத்தில் மிக அழகாக வடிவமைக்கப்பட்டுள்ள இக்கோயிலின் கருவறைக்கு மேல் விமானத்தில் தங்கத்தால் செய்யப்பட்ட 3 அடி உயரம், 3 அடி அகலத்தில் சுதர்ஸன சக்கரம் அமைக்கப்பட்டுள்ளது. ‘திரிபுவனமல்லடு’ என்ற மன்னன் அடிக்கடி இக்கோயிலுக்கு வந்து ஸ்ரீ நரசிம்மரை வழிபட்டுச் சென்றுள்ளதாக வரலாறு. மேலும், இக்கோயில் நரசிம்மரை வழிபட்டு கிருஷ்ணதேவராயருக்கு பிள்ளைப்பேறு கிடைத்ததாகவும் கூறப்படுகிறது.

தீராத நோயால் அல்லல்படுகிறவர்கள், இந்தத் திருக்கோயிலை 48 நாட்கள் வலம் வந்து வழிபட்டால், அனைத்து நோய்களும் தீர்ந்து விடுவதாக பக்தர்கள் நம்புகின்றனர். இதனால் இக்கோயில் நரசிம்மருக்கு, ‘வைத்திய நரசிம்மர்” என்ற பெயரும் உள்ளது. இக்கோயிலில் நாள்தோறும் ஏராளமான திருமணங்கள் நடைபெறுகின்றன. பிப்ரவரி – மார்ச் மாதங்களில் இந்தக் கோயிலில் பதினொரு நாட்கள் பிரம்மோத்ஸவம் வெகு விமரிசையாக நடைபெறுகிறது. இது தவிர, நரசிம்ம ஜயந்தி, அனுமன் ஜயந்தி, ஸ்ரீ ராமானுஜர், நம்மாழ்வார் திருநட்சத்திர விழாக்களும் நடைபெறுகின்றன.

தரிசன நேரம் : அதிகாலை 4 முதல் மதியம் 1 மணி வரை. மாலை 5 முதல் இரவு 8 மணி வரை.
அமைவிடம் : ஐதராபாத் – வாரங்கல் வழித்தடத்தில் 60 கி.மீ. தொலைவில் யாதகிரி மலை அமைந்துள்ளது.

Stay Connected

261,699FansLike
1,912FollowersFollow
7,330SubscribersSubscribe

Other Articles

நலம் பெருக்கும் நவநாயகர்!

- கே.சூரியோதயன் சூரியன் காசியப முனிவரின் குமாரர். ஒளிப்பிழம்பானவர். நவக்கிரகங்களில் முதன்மை ஸ்தானம் பெற்றவர். சிம்ம ராசிக்கு அதிபதி. நவக்கிரகங்களில் நடுவில் அமர்ந்திருப்பவர். திக்கு - கிழக்கு, அதிதேவதை - அக்னி, ப்ரத்யதி தேவதை - ருத்திரன்,...

வாழ்வைக் கடைத்தேற்றும் பஞ்ச நாமங்கள்!

- எ.எஸ்.கோவிந்தராஜன் ‘மனிதன் தம்மை நோக்கி ஓர் அடியாவது எடுத்து வைக்க மாட்டானா?’ என கடவுள் ஆவலோடு நமக்காகக் காத்துக்கொண்டிருக்கிறாராம். அப்படி நாம் கடவுளை நோக்கிச் செல்வதற்கான முதல் படி அவனது திருநாமங்களை உச்சரிப்பதுதான்....

பிரார்த்தனை பரிகாரத் தலங்கள்!

0
- டி.ஜெயலட்சுமி பூர்வஜென்ம தோஷ நிவர்த்தி வழிபாடு! சென்னை, தங்கசாலையையும், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சாலையையும் இணைக்கும் இடத்தில் உள்ளது சின்னக்கடை மாரியம்மன் என்ற ரேணுகா தேவி ஆலயம். இந்தக் கோயில் சுமார் 250 ஆண்டுகளுக்கு...

வைகுந்தத்துக்கு வழிகாட்டிய வள்ளல்!

1
- ஆர்.வி.பதி ‘வைணவ சம்பிரதாயத்தில் உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்ற பாகுபாடு கூடாது. வைணவன் என்பவன் பெருமாளுக்கு சேவை செய்பவன்’ என்பது ஸ்ரீ ராமானுஜரின் கருத்து. இந்தக் கருத்தினை தனது வாழ்வில் பல செயல்களின் மூலம்...

கேட்டேன்; ரசித்தேன்!

0
விபூதி தரிக்கும் விதம்! கோயிலில் விபூதியை வாங்கும்போது ஒன்றைக் கையை மட்டும் நீட்டி வாங்கக் கூடாது. வலக்கையின் கீழே இடக்கையைச் சேர்த்து வைத்து விபூதியை வாங்க வேண்டும். விபூதியை இடக்கையில் கொட்டி, அதிலிருந்து மறுபடி...