0,00 INR

No products in the cart.

ஆன்ம மோட்சத் திருத்தலம்!

– லதானந்த்

ஹாராஷ்ட்ரா மாநிலம், நாசிக் நகருக்குச் செல்பவர்கள் அவசியம் தரிசிக்க வேண்டிய திருத்தலம் பஞ்சவடி. இந்தத் திருத்தலம் கோதாவரி புனித நதியின் இடது கரையில் அமைந்துள்ளது. இங்கே அமைந்திருக்கும் ஐந்து ஆலமரங்களின் பெயரைக் கொண்டே இந்தத் திருத்தலம் பஞ்சவடி என அழைக்கப்படுகிறது. பஞ்சவடி எனும் தலப்பெயர், ‘பாஞ்ச்’ மற்றும் ‘வடி’ என்ற இரு வடமொழிச் சொற்களில் இருந்து பிறந்ததாகும். பாஞ்ச் என்றால் ஐந்து என்று பொருள். வடி என்றால் ஆலமரம். இந்த ஐந்து ஆலமரங்களில் இருந்து ஏராளமான மரங்கள் உற்பத்தியானதாகப் புராணக் குறிப்புகள் உள்ளன. இந்த மரங்கள் ராமாயணக் காலமான திரேதா யுகத்தில் இருந்து இங்கே இருப்பதாக ஐதீகம்.

அயோத்தி அரசன் தசரதனின் மனைவியருள் ஒருத்தியான கைகேயி, பணிப்பெண் மந்தரையின் சூழ்ச்சிக்குப் பலியாகிறாள். தனது மகன் பரதன் நாடாள வேண்டும் என்றும், ராமன் பதினான்கு ஆண்டுகள் வனவாசம் செல்ல வேண்டும் என்றும் தசரதனிடம் இரு வரம் பெற்றது ராமாயணம் படித்தவர் அனைவரும் அறிந்ததே.  அதன்படி ஸ்ரீராமன் தனது மனைவி சீதா தேவி மற்றும் தம்பி லட்சுமணனோடு வனவாசம் சென்றபோது, ‘ஜனஸ்தானம்’ என்னும் இடத்துக்கு வருகையில், அகத்தியரின் ஆலோசனையின்படி அங்கேயே தங்குகிறார். அங்கே ஐந்து ஆலமரங்கள் அழகுற வளர்ந்திருந்தன. அதனால் இந்த இடத்தை, ‘பஞ்சவடி’ என அழைத்தனர்.

ராவணனின் சகோதரி சூர்ப்பனகையின் மூக்கை லட்சுமணன் துண்டித்த இடமும் இங்குதான் உள்ளது. அதற்குப் பழிவாங்கவே இங்கிருந்து சீதையை இலங்கைக்கு ராவணன் கடத்திச் சென்றதாக ராமாயணம் சொல்கிறது. இந்தக் கோயிலுக்கு அருகிலேயே, ‘சீதா குகை’ என்ற இடம் உள்ளது. இந்த ஆலயத்தின் சுற்றுவட்டாரத்தில் கபாலீஸ்வரர், கங்கை – கோதாவரி, தபோவனம், சுந்தர நாராயணர், தால்குடேஸ்வரர், நரசிங்கர், ராமகுண்டம், பஞ்சமுக அனுமன், பத்ரகாளி ஆகியோருக்கு ஆலயங்கள் அமைந்துள்ளன. இந்த ஆலயத்தின் அருகிலேயே காந்தி நினைவு மண்டபம் ஒன்றும் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்தக் கோயிலின் அருகிலேயே வெள்ளை ராமர் மற்றும் கருப்பு ராமர் என இரு ஸ்ரீராமர் சன்னிதிகள் உள்ளன. வெள்ளை ராமர் கோயிலில் வெண் சலவைக் கல்லால் ஸ்ரீராமரின் திருமேனி பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. கருப்பு ராமர் கோயில் முழுக்க முழுக்கக் கருங்கற்களால் கட்டப்பட்டிருக்கிறது. இந்த ஸ்ரீராமபிரானுக்கு எள், குங்குமம், மஞ்சள் மற்றும் சர்க்கரை ஆகியவை படைக்கப்படுகின்றன. ஸ்ரீராமரின் வனவாசத்தை நினைவுபடுத்தும் வகையில் கோயிலில் பதினான்கு படிக்கட்டுகள் அமைந்துள்ளன. தவிர, கோயிலில் ராமாயணக் காட்சிகள் ஓவியங்களாக வரையப்பட்டிருப்பது மிகவும் சிறப்பு.

ந்தக் கோயிலின் அருகிலேயே அருணா, வருணா, கோதாவரி என்னும் மூன்று நதிகள் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் உள்ளது. இம்மூன்று நதிகளில் அருணா மற்றும் வருணா ஆகியன பூமிக்கடியில் பாய்வதாக நம்பிக்கை நிலவுகிறது. இத்தலத்தில் ஓடும் கோதாவரி நதியில்தான் தசரதனின் அஸ்தியை ஸ்ரீராமர் கரைத்ததாகக் கூறப்படுகிறது. அதனால் இறந்துபோன உறவினர்களின் அஸ்தியை பலரும் இங்கு பாயும் கோதாவரி நதியில் கரைக்கின்றனர். இதனால் இறந்தவர்களின் ஆன்மா மோட்ச கதியை அடையும் என்பது பக்தர்களின் கருத்து.

அமைவிடம்: நாசிக்கின் வடக்குப் பகுதியில் பஞ்சவடி உள்ளது. நாசிக் ரயில் நிலையத்திலிருந்து சுமார் 13 கி.மீ. தொலைவில் கோயில் அமைந்துள்ளது.

லதானந்த்
இயற் பெயர் டி.ரத்தினசாமி. புனைபெயர் லதானந்த். வனத் துறையில் அதிகாரியாகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். வனங்களில் வினோதங்கள், மெமரி பூஸ்டர், வாங்க பழகலாம், எனப்படுவது, பிருந்தாவன் முதல் பிரயாகை வரை ஆகிய நூல்களை எழுதியிருக்கிறார். உடைந்த கண்ணாடிகள், பாம்பின் கண் ஆகியன இவரது மொழிபெயர்ப்பு நூல்கள். ’நீலப்பசு’ என்னும் இவரது சிறுகதைத் தொகுப்புக்கு தமிழ்நாடு கலை இலக்கிய மேடை அமைப்பு, 2021ஆம் ஆண்டுக்கான ’பாரதிதாசன் விருது’ வழங்கியுள்ளது. கோகுலம் இதழின் பொறுப்பாசிரியராகப் பணியாற்றியுள்ள இவருக்கு, ‘சிறந்த சிறார் எழுத்தாளர்’ என்னும் விருதை தேசிய குழந்தைகள் புத்தகத் திருவிழா’ அமைப்பு வழங்கியுள்ளது.

Stay Connected

261,037FansLike
1,932FollowersFollow
11,900SubscribersSubscribe

Other Articles

கன்னியர் கோயில் ஆடி வெள்ளி திருவிழா!

0
- முத்து.இரத்தினம் புதுச்சேரி மாநிலத்தில் அமைந்துள்ளது அருள்மிகு பச்சைவாழி அம்மன் சமேத மண்ணாதீஸ்வரர் திருக்கோயில். பார்வதி தேவிக்கு உதவிய கன்னியர்களுக்கென்றே உருவான திருக்கோயில் இது என்று சொல்லப்படுகிறது. ‘கன்னியர் கோயில்’ என்றே அழைக்கப்படும் இத்திருக்கோயில்...

சயனக் கோலத்தில் ஸ்ரீ பத்ர மாருதி!

0
- லதானந்த் ஸ்ரீராம பக்த அனுமனை பொதுவாக நின்ற திருக்கோலத்திலோ, சஞ்சீவி மலையைத் தாங்கியபடியோ அல்லது சேவித்த கரங்களுடனோதான் தரிசித்திருப்போம். ஆனால், அனுமன் அபூர்வமாக உறங்குகின்ற திருக்கோலத்தில் மஹாராஷ்ட்ரா மாநிலம், ஔரங்காபாத் அருகே குல்தாபாத்...

அரச மரத்தடியில் அன்னை முப்பாத்தம்மன்!

- தனுஜா ஜெயராமன் தலைநகர் சென்னையில் அமைந்த மிகவும் பழைமை வாய்ந்த அம்மன் கோயில்களில் தியாகராயநகர் அருள்மிகு முப்பாத்தம்மன் திருக்கோயிலும் ஒன்றாகும். வேண்டியவர்க்கு வேண்டியபடி அருளும் ஸ்ரீ முப்பாத்தம்மன் கோயில் சமீபத்தில் புதுப்பிக்கப்பட்டு புதுப்பொலிவுடன்...

மன அமைதி தரும் சிந்தபள்ளி சாயிபாபா!

0
- வி.ரத்தினா தெலங்கானா மாநிலம், நல்கொண்டா மாவட்டத்தில்  அமைதியும் பசுமையும் நிறைந்த ரம்யமான சூழலில் காட்சி தரும் சிந்தபள்ளி கிராமத்தில் அமைந்துள்ளது ஷீர்டி பாபா ஆலயம். ஐந்து ஏக்கர் நிலப்பரப்பில் எழிலோடு அமைந்துள்ள பாபாவின்...

மூன்று வகை மனிதர்கள்!

0
- ஆர்.சுந்தரராஜன் ஒருசமயம் பகவான் மகாவிஷ்ணு கருடனுடன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அவர் கருடனிடம், “இந்த உலகில் எத்தனை விதமான மனிதர்கள் உள்ளனர் என்று உனக்குத் தெரியுமா?” என்று ஏதும் அறியாதவர் போல் கேட்டார். அதனைக் கேட்ட...