0,00 INR

No products in the cart.

அரச மரத்தடியில் அன்னை முப்பாத்தம்மன்!

– தனுஜா ஜெயராமன்

லைநகர் சென்னையில் அமைந்த மிகவும் பழைமை வாய்ந்த அம்மன் கோயில்களில் தியாகராயநகர் அருள்மிகு முப்பாத்தம்மன் திருக்கோயிலும் ஒன்றாகும். வேண்டியவர்க்கு வேண்டியபடி அருளும் ஸ்ரீ முப்பாத்தம்மன் கோயில் சமீபத்தில் புதுப்பிக்கப்பட்டு புதுப்பொலிவுடன் காட்சி தருகிறது. சுமார் முன்னூறு ஆண்டுகளுக்கு முன்பு நெல் விளையும் இந்த பூமியில் அரசும் வேம்பும் நிறைந்து காணப்பட்டது. இன்று கோயில் அமைந்திருக்கும் இந்தப் பகுதியில் பெரிய புற்று ஒன்றும் இருந்தது. புற்றின் அருகில் அமைந்திருந்த அரச, வேம்பு மரங்களையே ஆரம்ப காலத்தில் பக்தர்கள் வழிபட்டு வந்தனர். இந்த விவசாய நிலத்தில் விக்ரகமாகக் கிடைத்தவளே இன்று பலரும் அம்பிகையாக வழிபடும்
ஸ்ரீ முப்பாத்தம்மன் ஆவாள். முப்போகம் விளையும் விளைநிலத்தில் அருட்பயிராக அம்பிகை விளைந்ததால் அம்பாளுக்கு முப்பாத்தம்மன் எனப் பெயர் சூட்டியதோடு, ஒரு சிறு கோயிலையும் எழுப்பி பக்தர்கள் வழிபட்டனர். அதன் பிறகு பல தலைமுறைகளுக்குப் பிறகு அம்பிகைக்கு இங்கு கோயிலை எழுப்பியதோடு, பரிகார தேவதைகளையும் பிரதிஷ்டை செய்து வழிபடத் தொடங்கினர்.

கிழக்கு நோக்கி அமைந்துள்ள இந்தக் கோயில் சூலம் மற்றும் சிம்மத்துடன் பக்தர்களை வரவேற்க, கருவறையில் சாந்த சொருபியாகக் காட்சி தருகிறாள் அருள்மிகு முப்பாத்தம்மன். பின்னிரு கரங்களில் உடுக்கையும் முன்னிரு கரங்களில் சூலமும் விளங்க பூமாலைகளோடு எலுமிச்சை மாலையும் அணிந்து கம்பீரமாகக் காட்சி தருகிறாள்.

கோயிலின் வலது புறத்தில் நவகிரகங்களும், ஶ்ரீ விநாயகரும் வீற்றிருக்க, அருகிலேயே பிரம்மாண்டமான புற்று அரசமரத்தோடு காட்சி தருகிறது. இடது புறத்தில் வள்ளி தெய்வானை சமேத ஶ்ரீ சுப்ரமணியர் காட்சி தருகிறார். அருகிலேயே
ஶ்ரீ ஆஞ்சனேயருக்கு சன்னிதி உள்ளது.

வ்வொரு வாரமும் வெள்ளி மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் ராகு கால பூஜை செய்து, எலுமிச்சை விளக்கேற்றி, அம்மனுக்கு எலுமிச்சை மாலை அணிவித்து பக்தர்கள் வழிபடுகிறார்கள். இந்த பூஜையை ஒரு மண்டல காலம் செய்து 108 முறை பிராகாரத்தைச் சுற்றி வந்தால் திருமண தடைபடுவோருக்கு விரைவில் கல்யாண பாக்கியம் கைகூடுமென்பது ஐதீகம். வேண்டுதல் நிறைவேறிய பக்தர்கள் பலரும் அம்மனுக்கு பல்வேறு அபிஷேகங்கள் செய்து பிரார்த்தனைகளை நிறைவேற்றுகின்றனர். அதேபோல், வெள்ளி மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் நாக தோஷத்தைப் போக்க இக்கோயில் புற்றுக்குப் பாலூற்றி, மஞ்சள் தூவி பக்தர்கள் வழிபடுகிறார்கள். கிரக தோஷத்தால் பாதிப்பிற்குள்ளானவர்கள் நவகிரகங்களுக்கு எலுமிச்சை மற்றும் நெய் விளக்கு தீபமேற்றியும், ஶ்ரீ ஆஞ்சனேயருக்கு வெண்ணெய் சாத்தியும், வெற்றிலை மாலை அணிவித்தும் வழிபடுகின்றனர்.

இந்தக் கோயிலில் ஆடி மாதம் முழுவதும் சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது. ஆடி வெள்ளியன்று சிறப்பு அலங்காரத்தில் அம்மன் அருள்பாலிக்கிறார்.
ஆடி ஞாயிற்றுக்கிழமைகளில் கூழ் வார்த்தல் விழாவும், வெள்ளி, ஞாயிற்றுக் கிழமைகளில் அம்மனுக்கு வேண்டுதல் வைத்து நிறைவேறியவர்கள் மற்றும் புதிதாக வேண்டிக்கொள்பவர் என அனைவரும் பொங்கல் வைத்தும் வழிபாடு செய்கின்றனர். நவராத்திரி காலங்களில் கோயில் முழுவதும் பிரம்மாண்டமாக கொலு பொம்மைகளால் அலங்கரித்து, அலங்கார விளக்குகளால் ஜொலிக்கச் செய்கின்றனர். அச்சமயங்களில் அம்மனுக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். அப்போது அம்மனுக்குப் படைத்த நைவேத்தியப் பிரசாதங்கள் பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது. இத்தினங்களில் சென்னை முழுவதுமிருந்து வரும் பக்தர்கள் கூட்டத்தால் கோயில் அமர்க்களப்படும்.

வேண்டியதை வேண்டியபடி அருளும் அன்னை முப்பாத்தம்மன் கோயிலில் நாக தோஷத்தைப் போக்க புற்று வழிபாடும், திருமண பாக்கியம், புத்திர பாக்கியம் கிடைக்க ராகு கால பூஜையும் செய்து பக்தர்கள் அம்மனின் அருளைப் பெறுகிறார்கள். இக்கோயில் சென்னையின் பிரதான வியாபாரத் தளத்தில் அமைந்திருப்பதால் இந்த அம்பிகைக்கு பூஜை செய்து வியாபாரத்தைத் தொடங்கினால் தொழில் செழிக்கும் என்பது நம்பிக்கை. இந்த அம்பிகைக்குப் பால் அபிஷேகம் செய்தால் தீராத நோயையும் தீர்த்து வைப்பாள்.

தரிசன நேரம்: காலை 7 முதல் 12 மணி வரை. மாலை 4 முதல் 8 மணி வரை.

செல்லும் வழி: சென்னை சென்ட்ரலிலிருந்து திநகர் செல்லும் பேருந்தில் செல்லலாம். பூங்கா ரயில் நிலையத்திலிருந்து கோடம்பாக்கம் மற்றும் மாம்பலம் ஸ்டேஷனில் இறங்கி நடந்தும் செல்லலாம். தி.நகர் பனகல் பார்க் நிறுத்தத்தில் இறங்கினால் அருகிலேயே கோயில் அமைந்துள்ளது.

தனுஜா ஜெயராமன்
சென்னையை சேர்ந்த தனுஜா ஜெயராமன் வளரும் பெண் எழுத்தாளர். M.com படித்து அலுவலக கணக்காளராக பணிபுரியும் அவர் கதைகள் , கட்டுரைகள், ஜோக்ஸ், துணுக்குகளை எழுதுவதில் ஆர்வமுடையவர். பல்வேறு முன்னணிப் பத்திரிகைகளில் அவரது படைப்புகள் வெளியாகி உள்ளன. அமேசான் கிண்டிலில் அவரது சிரிப்பு கதை தொகுப்புகள் வெளியாகி உள்ளன.

Stay Connected

261,008FansLike
1,929FollowersFollow
12,000SubscribersSubscribe

Other Articles

கன்னியர் கோயில் ஆடி வெள்ளி திருவிழா!

0
- முத்து.இரத்தினம் புதுச்சேரி மாநிலத்தில் அமைந்துள்ளது அருள்மிகு பச்சைவாழி அம்மன் சமேத மண்ணாதீஸ்வரர் திருக்கோயில். பார்வதி தேவிக்கு உதவிய கன்னியர்களுக்கென்றே உருவான திருக்கோயில் இது என்று சொல்லப்படுகிறது. ‘கன்னியர் கோயில்’ என்றே அழைக்கப்படும் இத்திருக்கோயில்...

விநாயக சதுர்த்தியில் மூஷிக ஸ்தோத்திர வழிபாடு!

0
- பா.கண்ணன் விநாயகர் சதுர்த்தியின்போது கணநாயகனைப் போற்றி வணங்குகிறோம். அதேசமயம் அவரைச் சுமந்து செல்லும் வாகனமான மூஞ்சூறுவை நினைத்துப் பார்த்திருக்கிறோமா? அவரது பல அரியச் செயல்களை நினைவு கூர்வதும் அவசியமே. அதுவே இந்த மூஷிக...

சயனக் கோலத்தில் ஸ்ரீ பத்ர மாருதி!

0
- லதானந்த் ஸ்ரீராம பக்த அனுமனை பொதுவாக நின்ற திருக்கோலத்திலோ, சஞ்சீவி மலையைத் தாங்கியபடியோ அல்லது சேவித்த கரங்களுடனோதான் தரிசித்திருப்போம். ஆனால், அனுமன் அபூர்வமாக உறங்குகின்ற திருக்கோலத்தில் மஹாராஷ்ட்ரா மாநிலம், ஔரங்காபாத் அருகே குல்தாபாத்...

கதம்பமாலை

0
- எஸ்.ஸ்ருதி மஞ்சக்குடி முகூர்த்தப் பிள்ளையார்! திருமணம் மற்றும் சுப காரியங்களுக்கான முகூர்த்தம் நிச்சயமாவதற்கும், கல்வியில் சிறப்பதற்கும் வழிகாட்டுகிறார் மஞ்சக்குடி முகூர்த்தப் பிள்ளையார். அனுமனுக்கு இன்றளவும் தினமும் ஒவ்வொரு முகூர்த்த நேரத்திலும் வேதமா ஞானம் புகட்டி...

பிறவிப் பிணி போக்கும் சிவபுராணம்!

0
- எஸ்.தண்டபாணி சைவத் திருமுறைகள் என்பவை சைவ சமயக் கடவுளான சிவபெருமான் மீது பாடப்பட்ட நூல்களின் தொகுப்பாகும். பன்னிரு சைவ சமயத் திருமுறைகளில் மாணிக்கவாசகர் நமக்கு தந்தருளிய திருவாசகம் எட்டாம் திருமுறையாக உள்ளது. சிவபெருமான்...