0,00 INR

No products in the cart.

கதம்பமாலை

– எஸ்.ஸ்ருதி

மஞ்சக்குடி முகூர்த்தப் பிள்ளையார்!

திருமணம் மற்றும் சுப காரியங்களுக்கான முகூர்த்தம் நிச்சயமாவதற்கும், கல்வியில் சிறப்பதற்கும் வழிகாட்டுகிறார் மஞ்சக்குடி முகூர்த்தப் பிள்ளையார். அனுமனுக்கு இன்றளவும் தினமும் ஒவ்வொரு முகூர்த்த நேரத்திலும் வேதமா ஞானம் புகட்டி வரும் முகூர்த்தப் பிள்ளையார் மஞ்சக்குடி ஸ்ரீ வில்வவனேஸ்வரர் சிவாலயத்தில் அருள்கிறார். முகூர்த்த பிள்ளையாருக்கு புதன், சனிக்கிழமைகள் தோறும் கஸ்தூரி மஞ்சள் பூசிய தேங்காய் மாலை சாத்தி, ‘முத்தியாலு தேங்காய்’ எனப்படும் நன்கு முற்றிய நான்கு தேங்காய்களை முகூர்த்தத் தேங்காய்களாகப் படைத்து நிவேதனம் செய்து வழிபட்டு வந்தால், திருமணத் தடைகள் அகன்று, விரைவில் திருமண முகூர்த்த நாள் நிச்சயமாகும்.

விநாயகருக்குப் படைத்த முகூர்த்த தேங்காய்களை நன்கு துருவி நெய், சர்க்கரை அல்லது வெல்லம், ஏலக்காய், முந்திரிப் பருப்பு சேர்த்து முதலில் காக்கைகளுக்குப் படைத்து, பிதுர் தேஷ நிவர்த்திக்கு ஆவன செய்து பிறகு தானமாய், குறிப்பாக குழந்தைகளுக்கு அளிக்கவும். சுபமங்கலத் திருமணத்திற்கு அருளும் வரசக்தி விநாயகர் இவர். படிப்பில் மந்தமாக உள்ள குழந்தைகளுக்காக புதன்கிழமை, சனிக்கிழமை நாட்களில் முகூர்த்தப் பிள்ளையாருக்கு இயன்றால் தேங்காய் மாலை சாத்தியோ அல்லது தாமரைத் தண்டுத்திரி மற்றும் தேங்காய் எண்ணெயால் பன்னிரண்டு விளக்குகளை ஏற்றியோ வழிபட்டு வந்தால் கல்வியில் நன்கு முன்னேறுவர். புதுக்கோட்டை மாவட்டம், மணல்மேல்குடி தாலுகாவில் மஞ்சக்குடி முகூர்த்தப் பிள்ளையார் கோயில் அமைந்துள்ளது.

கணபதி நிவேதனப் பலன்கள்!

னீஸ்வரரை அடக்கும் சக்தியை விநாயகர் பெற்றதால் எள்ளுருண்டை அவர் பிறந்த நாளான விநாயகர் சதுர்த்தியில் நிவேதனமானது. ராகு தொல்லையிலிருந்து நீங்க உளுத்தம் கொழுக்கட்டையும், வடையும், சந்திராஷ்டம சங்கடங்கள் நேராதிருக்க அரிசி மாவும், குரு, சுக்ரன் அருள் கிடைக்க வெல்லத்தையும், யானைக்குப் பிரியமான தேங்காய், கடலைப் பருப்பும், சூரியன் சாதகமாக கோதுமை மாவிலான அப்பமும், விநாயகர் பூஜையின்போது நிவேதனத்தில் இடம் பெறுகின்றன. விஷத்தை முறிக்கும் வல்லமை கொண்ட விநாயகருக்கு எருக்கு மாலை விசேஷம். மனித சரீரத்தில் கொழுப்பு சேராமலிருக்க அருகம்புல் அர்ச்சனை.

உப்பினால் விநாயகர் செய்து பூஜித்து அரசர்கள் போரில் வெற்றி கண்டிருக்கிறார்கள். விவசாயிகள் சாணத்தால் பிள்ளையார் பிடித்து வழிபட்டு பயிர் அமோகமாக விளைந்தது கண்டு ஆனந்தம் அடைந்துள்ளனர். மர கணபதி வடிவம் பில்லி, சூன்யம், ஏவர், காற்று கருப்பு ஆகியவற்றை முறியடிக்கும் என நம்பப்படுகிறது. ஞானம் பெற வெள்ளெருக்கு விநாயகர், வியாதி குணமாக வெண்ணெயில் கணேச வடிவம், திருமணத் தடை நீங்க மஞ்சள் பிள்ளையார், தொழில் அபிவிருத்திக்கு, ஆயுள் விருத்திக்கு வெல்லப் பிள்ளையாரை வணங்குதல் நலம் என்கிறது புராணம்.

கடன் தீர்க்கும் தோரண கணபதி!

ம்பிகை தனியாகக் கோயில் கொண்டுள்ள தலங்களில் சில இடங்களில் தோரணவாயில் என்ற அமைப்பு உண்டு. அதனுள் பிரவேசிக்கும்போது பலி பீடத்துக்கருகே வலப்பாகத்தின் மேகலையில் ஸ்ரீ தோரண கணபதியை பிரதிஷ்டை செய்திருப்பார்கள். ஜடாமகுடமும், கழுத்தில் ருத்திராட்ச மாலையும் வலக்கரத்தில் அங்குசமும், இடது மேல் கரத்தில் பாசமும் ஏந்தி, இடக்கரத்தில் மோதகமும் வைத்துக்கொண்டு, தனது வலது கையால் தந்தத்தைப் பிடித்துக்கொண்டு வணங்குவோருக்கு வருகின்ற கஷ்டங்களையும், ருணம் எனும் கடனையும் தீர்த்து அருள்கிறார். பிள்ளையார்பட்டி, மயிலாடுதுறை, காசி ஆகிய இடங்களில் தோரண கணபதியை தரிசிக்கலாம். தோரண கணபதியின் அம்சத்தைத் தனிக்கோயிலில் சிருங்கேரி சாரதா பீடத்தில் தரிசிக்க முடியும்.

கடன் தீர்க்க பூஜை: தோரண வாயிலிலுள்ள தோரண கணபதி சன்னிதியில் செவ்வாய், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஏதேனும் ஒரு கிழமையை தேர்ந்தெடுத்துக்கொண்டு ஆறு வாரங்கள் கணபதி மேகலை முன்பாக மூன்று நெய் தீபங்கள் ஏற்றி, முப்பழங்கள் சமர்ப்பித்து, அருகு சாத்தி அர்ச்சனை செய்தால் தோரண கணபதி தனது வலது கையில் எழுத்தாணி போன்று வைத்துள்ள தந்தத்தால் கடன்களைத் தீர்க்கும்படி எழுதி விடுவார் என்ற நம்பிக்கை உள்ளது. மிகச்சிறிய கடன் உள்ளவர்கள் சுக்ல சதுர்த்தியிலும், சங்கடஹர சதுர்த்தி மற்றும் குறித்த கிழமைகளிலும் ருணமோசன தோரண கணபதி ஹோமத்தை நடத்துவதும் வழக்கத்திலுள்ளது.

தோரண கணபதி மூல மந்திரம்:

‘ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லாம் கலௌம் கம் தோரண கணபதயே
சர்வகார்ய கர்த்தாய ஸகல சித்திகராய ஸர்வஜன வசீகரணாய
ருணாமோசன வல்லபாய ஹ்ரீம் கம் கணபதயே ஸ்வாஹா’

தோரண கணபதி பெருமானை, கடன் பெற்று அடைக்க முடியாமல் அவதிப்படுவோர் மட்டுமின்றி; கொடுத்த கடன் திரும்பக் கிடைக்காமல் சிரமப்படுபவரும், முதல் வந்தால் போதும் என்று நினைப்போரும் இந்த கணபதியை வழிபட்டு பலன் அடையலாம்.

காரிய வெற்றி தரும் தூர்வா கணபதி விரதம்!

சிராவண மாதம் சுக்லபக்ஷ சதுர்த்தியன்று (1.8.2022) தூர்வா கணபதி விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது. இன்று காலை சுத்தமான ஓரிடத்தில் கோலமிட்டு, தரை முழுவதும் தூர்வை என்னும் அறுகம்புல்லைப் பரப்பி, புல்லின் மீது ஸ்ரீ கணபதி விக்ரகம் அல்லது படத்தை வைத்து பூஜை செய்ய வேண்டும்.

பூஜையில் செய்யப்படும் ஆவாஹனம் முதலான 16 உபசாரங்களையும் அறுகம்புல்லைக் கொண்டே செய்ய வேண்டும். கொப்பரைத் தேங்காய், அவல் நிவேதனம் செய்து, கற்பூரம் காட்டி நமஸ்கரித்து பூஜையின் முடிவில்,

‘கணபதயே நம:
உமாபுத்ராய நம:
அகநாசநாய நம:
ஏகதந்தாய நம:
இபவக்த்ராய நம:
மூஷிகவாஹனாய நம:
வினாயகாய நம:
ஈசபுத்ராய நம:
ஸர்வஸித்திப்ரதாயகாய நம:
குமாரகுரவே நம:’

என்னும் பத்து நாமங்களைச் சொல்லி அறுகம்புல்லால் கணபதியை அர்ச்சனை செய்து, கீழ்க்கண்ட சுலோகத்தைக் கூறி பிரார்த்தித்துக் கொள்ள வேண்டும்.

‘கணேஸ்வர கணாத்யக்ஷ கௌரீபுத்ர கஜானன/
வ்ரதம் ஸம்பூர்ணதாம் யாதுத்வத் ப்ரஸாதாத் இபாநந//

இவ்வாறு அறுகம்புல்லால் கணபதியை நியமத்துடன் பூஜிப்பவர்களுக்கு அனைத்து இடையூறுகளும் விலகி, எல்லா காரியங்களிலும் வெற்றி கிட்டும்.

– கே.சக்தி, சென்னை

Stay Connected

261,037FansLike
1,932FollowersFollow
11,900SubscribersSubscribe

Other Articles

கன்னியர் கோயில் ஆடி வெள்ளி திருவிழா!

0
- முத்து.இரத்தினம் புதுச்சேரி மாநிலத்தில் அமைந்துள்ளது அருள்மிகு பச்சைவாழி அம்மன் சமேத மண்ணாதீஸ்வரர் திருக்கோயில். பார்வதி தேவிக்கு உதவிய கன்னியர்களுக்கென்றே உருவான திருக்கோயில் இது என்று சொல்லப்படுகிறது. ‘கன்னியர் கோயில்’ என்றே அழைக்கப்படும் இத்திருக்கோயில்...

விநாயக சதுர்த்தியில் மூஷிக ஸ்தோத்திர வழிபாடு!

0
- பா.கண்ணன் விநாயகர் சதுர்த்தியின்போது கணநாயகனைப் போற்றி வணங்குகிறோம். அதேசமயம் அவரைச் சுமந்து செல்லும் வாகனமான மூஞ்சூறுவை நினைத்துப் பார்த்திருக்கிறோமா? அவரது பல அரியச் செயல்களை நினைவு கூர்வதும் அவசியமே. அதுவே இந்த மூஷிக...

சயனக் கோலத்தில் ஸ்ரீ பத்ர மாருதி!

0
- லதானந்த் ஸ்ரீராம பக்த அனுமனை பொதுவாக நின்ற திருக்கோலத்திலோ, சஞ்சீவி மலையைத் தாங்கியபடியோ அல்லது சேவித்த கரங்களுடனோதான் தரிசித்திருப்போம். ஆனால், அனுமன் அபூர்வமாக உறங்குகின்ற திருக்கோலத்தில் மஹாராஷ்ட்ரா மாநிலம், ஔரங்காபாத் அருகே குல்தாபாத்...

அரச மரத்தடியில் அன்னை முப்பாத்தம்மன்!

- தனுஜா ஜெயராமன் தலைநகர் சென்னையில் அமைந்த மிகவும் பழைமை வாய்ந்த அம்மன் கோயில்களில் தியாகராயநகர் அருள்மிகு முப்பாத்தம்மன் திருக்கோயிலும் ஒன்றாகும். வேண்டியவர்க்கு வேண்டியபடி அருளும் ஸ்ரீ முப்பாத்தம்மன் கோயில் சமீபத்தில் புதுப்பிக்கப்பட்டு புதுப்பொலிவுடன்...

பிறவிப் பிணி போக்கும் சிவபுராணம்!

0
- எஸ்.தண்டபாணி சைவத் திருமுறைகள் என்பவை சைவ சமயக் கடவுளான சிவபெருமான் மீது பாடப்பட்ட நூல்களின் தொகுப்பாகும். பன்னிரு சைவ சமயத் திருமுறைகளில் மாணிக்கவாசகர் நமக்கு தந்தருளிய திருவாசகம் எட்டாம் திருமுறையாக உள்ளது. சிவபெருமான்...