0,00 INR

No products in the cart.

விநாயக சதுர்த்தியில் மூஷிக ஸ்தோத்திர வழிபாடு!

– பா.கண்ணன்

விநாயகர் சதுர்த்தியின்போது கணநாயகனைப் போற்றி வணங்குகிறோம். அதேசமயம் அவரைச் சுமந்து செல்லும் வாகனமான மூஞ்சூறுவை நினைத்துப் பார்த்திருக்கிறோமா? அவரது பல அரியச் செயல்களை நினைவு கூர்வதும் அவசியமே. அதுவே இந்த மூஷிக ஸ்தோத்திரம். இது இந்தி மொழி இலக்கியத்தில் மட்டுமே உள்ள கிண்டலுடன் கூடிய நையாண்டித் துதிப் பாடல்கள். அவற்றில் தமிழாக்கம் செய்யப்பட்ட சில பாடல்களைப் பார்ப்போம்.

18, 19ஆம் பொ.ஆ. காலக்கட்டம் ‘ரிதி காவியக் கால்’ (செயல்முறைக் காலம்) என அழைக்கப்படுகிறது. அப்போது பல கவிஞர்கள் காலத்தால் அழியாத கவிதைகளை இயற்றினர். அச்சமயம் இந்தி இலக்கியவானில் ராதாசரண் கோஸ்வாமி நையாண்டி கலந்து இயற்றியதுதான் இந்த மூஷிக ஸ்தோத்திரம். சதுர்த்தி திருநாளில் விநாயகரைப் போற்றும் நாம், மூஞ்சூறுவையும் வாழ்த்தி வணங்குவோம்.

விநாயகருக்கு உகந்த வாகனமான ஹே… மகாகணேச மூஷிகரே, அநேக
நமஸ்காரம். தங்களது சிறிய உடல் மீது உருண்டு, திரண்ட பலசாலி கணேசரை ஏற்றிச் செல்வது உங்களது அன்றாட அலுவலாகும். கணேஷ்ஜி ஆயிரமாயிரம் தடைகளை வெற்றிகரமாக அகற்றுகையில், தாங்களும் கோடிக்கணக்கில் அம்மாதிரித் தடைகளை உங்களுடையத் தோத்திரங்களைச் சொல்வது மூலம் களைவீர்கள் என்று நம்புகிறோம். எனவே, ‘ஓம் ஶ்ரீ மகா கணாதிபதயே மூஷிகே சாய நம:’ என்று சொல்லி அழைக்கிறோம்!

பொருள் திருடும் பக்த சிகாமணியே! உங்கள் கள்ளச் செயலுக்குப் புண்ணியம் தேடிக்கொண்டதைப் பாராட்டாமல் இருக்க முடியுமா? அணையும் நிலையிலிருந்த ஒரு சிவன் கோயில் விளக்கின் எஞ்சியிருந்த எண்ணையைக் குடிக்க நீங்கள் அதன் மீது ஏறியபோது உங்கள் வால் நுனியால் திரி தூண்டப்பட்டு விளக்கு பிரகாசமானது. ஈசனின் கருணைப் பார்வையும் உங்கள் மீது விழ, தன்னையறியாமல் நீங்கள் செய்த அக்காரியத்தால் மோட்சமே கிடைத்ததே!

காபுத்திசாலி மூஷிகரே! ருக்மிணி மண்டல் கதாகாலட்சேபத்தில் கேட்டிருக்கிறேன். ருக்மிணி கல்யாண மாப்பிள்ளை அழைப்புக்கு ஶ்ரீ கிருஷ்ணர் விநாயகரைக் கூப்பிடாததால், ஆத்திரமடைந்த நீங்கள் ஊர்வலம் வரும் வழியைப் பள்ளம் தோண்டி வைத்துவிட்டீர். கிருஷ்ணர் வரும் ரதம் அந்தக் குழியில் விழுந்து அவர் அவமானமடைந்து நிற்பாரே! அதனால்தானே பின்னர் மனம் மாறி கணேசரை அழைக்க வேண்டியதாயிற்று! ஆகையால், முன்னெச்சரிக்கையாக இப்போதே என் கொள்ளுப்பேரன் திருமணத்துக்கு அழைப்புத் தந்து விடுகிறேன், தவறாமல் பந்து ஜனங்களுடன் வந்து சேருங்கள்!

ஹே… மூஞ்சூறு தூதுவரே! அனைவரும் உங்களைப் பரமேஸ்வரரின்
பிரதிநிதியாகவே பாவித்து பூஜிக்கின்றனர். ஆகையால், எனது நமஸ்காரங்களையும் ஏற்றுக்கொள்ளுங்கள்!

ஹே… நாலு கால் பிராணியே! உங்களுடைய நான்கு புஜங்களும் (மேல் கைப்பாகம்) தர்மம், பொருட்செல்வம், காமம், மோட்சம் அளிக்க வல்லது. மறுபுறம் பார்த்தால் நான்கு கால்களும் உள்ளன. ஆகவே, நீங்கள் நான்கு புஜங்கள், நான்கு கால்கள் கொண்டவராக விளங்குகிறீர். ஆனால், சங்கு, சக்கரம், சாரட்டு வண்டி இல்லாததுதான் குறைச்சல்!

கொக்குப் பறவையின் பரம பக்தனே! எல்லோரும் அதைப் பரிகாசம் செய்கிறார்கள்- உறுமீன் வருமளவும் தியானத்தில் காத்திருக்கும் என்று! என் புத்திக்கு எட்டின வரை நீங்களே அதற்கு குருநாதர் ஆவீர்! அசையாமல் தியானத்தில் ஆழ்ந்திருப்பீர், மற்றவர்களின் பார்வை படாதபோது பொருளைத் திருடுவது, அப்படியே பார்த்துவிட்டாலும் நொடியில் தோழர்களுடன் மறைவது உங்களுக்குக் கைவந்தக் கலை! கொக்கின் வம்சாவளிக்கு இது தெரிய நியாயமில்லை! வரிசையாக ஒருவர் பின் ஒருவராகத் தொடர்ந்து போகும் காட்டுவாசி போன்றவர் அல்லவோ நீங்கள்!

ஹே… பசு மேய்க்கும் கோபாலன் போன்றவரே! பகல் முழுவதும் பிருந்தாவனம் எனும் தன் வளைக்குள் குடும்பத்தினருடன் சல்லாபித்துக் கொண்டிருப்பீர். இரவானதும் தனது கோபிகைப் பரிவாரத்துடன் அண்டை வீடுகளில் நுழைந்து கிருஷ்ணர் போல் ராஸலீலையில் மூழ்கி விடுவீர். அதனால் ஹே… ராஸ்பிஹாரீ! நானும் உங்கள் பரம சீடன் ஆகிவிடுகிறேன்… ஏற்றுக்கொள்ளுங்கள்!

ஹே… அநேக ரூப ரூபாய விஷ்ணவே ப்ரபவிஷ்ணவை! நீங்கள் பல வடிவங்களில் சுற்றி அலைகிறீர். சுண்டு விரல் அளவேயுள்ள வால்கில்யர் போன்ற சுண்டெலி, பீமசேனன் போன்ற குண்டு எலி, அசுரன் ராவணன் போன்ற பலசாலி பெருச்சாளி மற்றும் உபத்திரவம் செய்வதற்கென்றே சுற்றி வரும் கல்லெலி, சரவெலி போன்ற உங்கள் வம்சாவளியினர் அனைவருக்கும் சேர்த்து இத்துதியைப் பாடி பரவுகிறேன்… காது கொடுத்துக் கேளுங்கள்!

ஹே… குரு கோவிந்த்! உங்கள் இனத்தில் மலை எலிக்கு ஒரு முக்கிய ஸ்தானம் கொடுக்கப்பட்டுள்ளது. ஒரே இடத்தில் இருந்தாலும் அதைக்கண்டு பயந்த நிலை காலப்போக்கில் மாறி, உங்கள் அதிகாரம் ஓங்கிவிட, முன்னவருக்குரிய மரியாதை, விதிமுறைகளைத் தந்திரமாகக் கைப்பற்றி அவரைச் செல்லாக் காசாக்கி விடுகிறீர்கள். என்னே உங்கள் சாமர்த்தியம்!

ல்லோருக்கும் குருவாக ஒருவர் இருப்பார், அவசியமும் கூட! நீங்களும், பொருள் அபகரித்தல், வெண்ணையைத் திருடுதல் போன்ற செயல்களை யாரிடமிருந்தோ கற்றுக்கொண்டிருக்கிறீர்கள் என்பது நிதர்சனமான உண்மை! அந்தப் பரம ரகசியத்தை எங்களுக்கும் சொல்லுங்களேன்!

பற்பல வதந்திகளுக்கு உள்ளானவரே! அதில் ஒரு முக்கியமானக் குற்றச்சாட்டு… உண்ட வீட்டுக்கே குந்தகம் விளைவிப்பீர், உறவாடிய வீட்டிலேயே கன்னம் வைத்துக் களவாடுவீர் என்பது உண்டா, இல்லையா? நல்லவர் போல் வேஷம் போடுவதில் உங்களை மிஞ்சுபவர் வேறு யாரேனும் உண்டோ?

ஹே… எங்கும் நிறைந்திருக்கும் சர்வோபரி மூஞ்சூறு தேவனே! எதுவரை உங்களைப் போற்றித் துதிப்பது என்று முழிக்க வேண்டியிருக்கிறது! தங்கள் குணாதிசயங்களைப் பாடியவாறே சாக்ஷாத் சரஸ்வதி தேவி சன்னிதானம் வரை சென்று விட்டோம். போதும், இத்துடன் உங்கள் எண்ணற்றப் பிரதாபங்கள் சொல்வதை நிறைவு செய்கிறோம். நாங்கள் கேட்கும் ஒரே ஒரு வரத்தை மட்டும் அளியுங்கள். எந்தப் பொருளை வேண்டுமானாலும் கடித்துக் குதறித் தள்ளுங்கள். ஆனால், இந்த ஸ்தோத்திரத்தை மட்டும் அப்படிச் செய்து விடாதீர்கள். ஏனென்றால், இது உங்களுக்கு அளிக்கப்படும் 19ஆம் நூற்றாண்டின் நற்சான்றிதழாகும்! வளைக்குள் பத்திரமாக வைத்துக் கொள்ளுங்கள். வெளியே போகும்போது பதக்கம் போல் கழுத்தில் அணிந்து கொண்டு கம்பீரமாகச் செல்லுங்கள்!

விநாயகர் சதுர்த்தி நன்னாளில் கணநாதனை முதுகில் அமர்த்திக் கொண்டு நகர் வலம் வரும் பேரழகைக் காண ஆவலுடன் காத்திருக்கிறோம்.

ஜெயது, ஜெயது மூஷிகா!

Stay Connected

261,008FansLike
1,929FollowersFollow
12,000SubscribersSubscribe

Other Articles

கன்னியர் கோயில் ஆடி வெள்ளி திருவிழா!

0
- முத்து.இரத்தினம் புதுச்சேரி மாநிலத்தில் அமைந்துள்ளது அருள்மிகு பச்சைவாழி அம்மன் சமேத மண்ணாதீஸ்வரர் திருக்கோயில். பார்வதி தேவிக்கு உதவிய கன்னியர்களுக்கென்றே உருவான திருக்கோயில் இது என்று சொல்லப்படுகிறது. ‘கன்னியர் கோயில்’ என்றே அழைக்கப்படும் இத்திருக்கோயில்...

சயனக் கோலத்தில் ஸ்ரீ பத்ர மாருதி!

0
- லதானந்த் ஸ்ரீராம பக்த அனுமனை பொதுவாக நின்ற திருக்கோலத்திலோ, சஞ்சீவி மலையைத் தாங்கியபடியோ அல்லது சேவித்த கரங்களுடனோதான் தரிசித்திருப்போம். ஆனால், அனுமன் அபூர்வமாக உறங்குகின்ற திருக்கோலத்தில் மஹாராஷ்ட்ரா மாநிலம், ஔரங்காபாத் அருகே குல்தாபாத்...

கதம்பமாலை

0
- எஸ்.ஸ்ருதி மஞ்சக்குடி முகூர்த்தப் பிள்ளையார்! திருமணம் மற்றும் சுப காரியங்களுக்கான முகூர்த்தம் நிச்சயமாவதற்கும், கல்வியில் சிறப்பதற்கும் வழிகாட்டுகிறார் மஞ்சக்குடி முகூர்த்தப் பிள்ளையார். அனுமனுக்கு இன்றளவும் தினமும் ஒவ்வொரு முகூர்த்த நேரத்திலும் வேதமா ஞானம் புகட்டி...

அரச மரத்தடியில் அன்னை முப்பாத்தம்மன்!

- தனுஜா ஜெயராமன் தலைநகர் சென்னையில் அமைந்த மிகவும் பழைமை வாய்ந்த அம்மன் கோயில்களில் தியாகராயநகர் அருள்மிகு முப்பாத்தம்மன் திருக்கோயிலும் ஒன்றாகும். வேண்டியவர்க்கு வேண்டியபடி அருளும் ஸ்ரீ முப்பாத்தம்மன் கோயில் சமீபத்தில் புதுப்பிக்கப்பட்டு புதுப்பொலிவுடன்...

பிறவிப் பிணி போக்கும் சிவபுராணம்!

0
- எஸ்.தண்டபாணி சைவத் திருமுறைகள் என்பவை சைவ சமயக் கடவுளான சிவபெருமான் மீது பாடப்பட்ட நூல்களின் தொகுப்பாகும். பன்னிரு சைவ சமயத் திருமுறைகளில் மாணிக்கவாசகர் நமக்கு தந்தருளிய திருவாசகம் எட்டாம் திருமுறையாக உள்ளது. சிவபெருமான்...