திருப்பதியில் பார்த்து ரசிக்க வேண்டிய 9 இடங்கள்!

திருப்பதியில் பார்த்து ரசிக்க வேண்டிய 9 இடங்கள்!

1. கபில தீர்த்த அருவி:

திருப்பதிக்கு பல தடவை சென்றவர்கள்கூட இந்த கபில தீர்த்த அருவிக்கு சென்றிருக்க மாட்டார்கள். இந்த இடமானது கீழ் திருப்பதியில்தான் உள்ளது. அது மட்டுமில்லாமல் இங்கு கபிலேஸ்வரர் கோயில் உள்ளது. அது பார்ப்பதற்கு பிரமாண்டமாக இருக்கும். திருப்பதி போனால் பார்த்துவிட்டு வாருங்கள்..!

2. நகரவனம் ஜங்கிள் புக்:

3. மால்வாடி குண்டம்:

இது அருமையான அருவிதாங்க. ஜங்கிள் புக் உள்ள பக்கம்தான் உள்ளது. இதுவும் கீழ் திருப்பதியில்தான் உள்ளது. இந்த இடத்திற்கு கீழ் பக்கம் பள்ளம் மாதிரி ஒரு இடம் உள்ளது. அதனால்தான் இது மால்வாடி குண்டம் என்று பெயர் பெற்றது.

4. ஆகாச கங்கை:

இந்த இடம் மேல் திருப்பதியில்தான் உள்ளது. எழுமையான் கோயிலிருந்து சரியாய் 7 கிலோ மீட்டர் தூரத்தில்தான் உள்ளது. இந்த இடத்திற்கு செல்ல அரசு பேருந்து வசதி உள்ளது. இந்த அருவியிலிருந்து பாட்டிலில் தீர்த்தம் பிடித்தும் செல்வார்கள். இங்கு குளிக்கவும் முடியும்.

5. பாப விநாசம் திருப்பதி:

இந்த இடமானது திருப்பதிலிருந்து 8 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. அங்கு ஒரு Dam உள்ளது. அங்கு குளித்துவிட்டு (குளிப்பதற்கான அனுமதி பல சமயங்களில் இருப்பதில்லை) அங்கு உள்ள கங்காதேவி கோயிலில் குளித்தால் நாம் செய்த பாவம் அனைத்தும் கழிந்துவிடும் என்பார்கள்.

6. ஜாபாலி திருப்பதி:

இந்த இடம் ஆகாச கங்கைக்கு செல்வதற்கு 1 கிலோமீட்டருக்கு முன்னாடியே இருக்கும். மலையில் ஏறிசென்று அங்குள்ள ஆஞ்சநேயரை வணங்கி வரவேண்டும். சூப்பரான இயற்கையான இடம். இங்கு மர அணில்களைப் பார்க்கலாம்.

7. சிலா தோரணம்:

இந்த இடம் ஒரு பாறை அமைப்பு.  இந்த இடத்தில் ஒரு பார்க் உள்ளது, குடும்பத்துடன் சென்று சுற்றி பார்த்துவிட்டு வரலாம்.

8. சக்கர தீர்த்தம்:

சிலாதோரணத்திலிருந்து கொஞ்ச தூரம் நடந்து சென்றால் இந்த இடத்திற்கு செல்லலாம். குளிப்பதற்கு சரியான இடமாக இருந்தாலும், யாரும் குளிக்கமாட்டார்கள், ஏனென்றால் இது ஒரு புண்ணிய தீர்த்தம் என்பதால்.


9. ஸ்ரீ வாரி பாதம்:

இந்த இடத்தில் பெருமாளுடைய பாதம் இருக்கும். முன்பு இதனை தொட்டு பார்க்க முடியும், ஆனால் இப்போது கண்ணாடி பெட்டிக்குள் உள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com