திருப்பூரில் ஒரு திருப்பதி!

திருப்பூரில் ஒரு திருப்பதி!

திருப்பதியில் ஆனந்த விமானத்தில் அருள்பாலிக்கின்ற திருவேங்கடமுடையான் திருப்பதி சென்று தரிசிக்க முடியாத தன் பக்தர்களுக்காக திருப்பூரில் கோவில் கொண்டு அருள் பாலிக்கிறார் மூலவர் வெங்கடேச பெருமாள் திருப்பதி பெருமாளை போன்று இருப்பது சிறப்பு.

அழகிய கமலம் போன்ற கண்கள் கூர்மையான நாசி குவிந்த வாய் பெரிய கிரீடம் நெற்றித்திருமண் காப்பு முகவாயில் பச்சை கற்பூரம் இரண்டு கரங்களின் சங்கும் சக்கரமும் தாங்கி ஒரு கரத்தை தனது முழங்கால் அருகிலும் வைத்துக் கொண்டு சாட்சாத் திருமலைவாசனாகவே இத்தல பெருமாள் தரிசனம் தருகின்றார்.

திருமார்பில் தாயார் சேவை சாதிக்கிறார். என்னை வணங்கினால் என் திருவடியைப் பிடித்துக் கொண்டால் இந்த சம்சாரம் ஆகிய சமுத்திரம் முழங்கால் வரையில்தான் சுலபமாக கரையேறிவிடலாம் என்று உணர்த்துவது போல் தோன்றுகிறது பெருமாளின் திருக்கோலம்.

நல்லாம்பட்டுக்குன்றம் என்ற மலையிலிருந்து ஏழுமலையானின் திருமேனி செய்வதற்காக கல் எடுக்கப்பட்டது.

இத்திருக்க வழியில் கும்பாபிஷேகம் 2003 ஆம் வருடம் நடைபெற்ற வேளையில் மந்திர சக்தி ஊட்டப் பெற்ற புனித நீரை கருவறை விமானத்தின் மீதும் ஊற்றிய போது மூலவர் சிலைக்கு முகத்திலும் திருமேனியிலும் வேர்த்து கொட்டியது. மந்திர சக்தியையும் வீரிய சக்தியையும் அந்த வேங்கடவன் சிலை தன்னுள் கிரகித்துக் கொண்ட போது அதுவரை கற்சிலையாக என்னும் மூலவருக்கு தெய்வீக பிராண சக்தி ஏற்பட்டு உயர்த்துக் கொட்டியது. பட்டு துணியால் பெருமாளின் முகத்திலும் திருமேனியிலும் உண்டான வேர்வையை துடைக்க,  மீண்டும் மீண்டும் அந்த திருமலை அப்பனுக்கு வியர்த்தது. ஒருபுறம் பட்டு விசிறியாலும் மற்றொருபுறம் வெண் சாமரத்தினாலும் வெகு நேரம் வீசிய பின்பே பெருமானின் திருமேனி குளிர்ந்தது. அதே சமயத்தில் வானத்தில் மூன்று கருட பட்சிகள் கருவறை விமானத்தை மூன்று முறை வலம் வந்தன.

திருவேங்கடமுடியானுக்கு திருப்பதியில் பச்சை கற்பூரத்தில் திருமண் காப்பு முகவாய் கட்டையில் அணிந்திருப்பது போல திருப்பதிக்கு அடுத்து திருப்பூர் சன்னதியில் மட்டும்தான் அணிவித்து வழிபாடு செய்கிறார்கள். பச்சை கற்பூரம் அமிலத்தன்மை நிறைந்தது. சாதாரண ஒரு கல் அல்லது பாத்திரத்தில் வைத்தால் அதை அரித்துவிடக் கூடிய தன்மை கொண்டது. அப்படிப்பட்ட அமிலத்தன்மை வாய்ந்த பச்சை கற்பூரத்தை இறைவனின் திருமேனித் தாங்குகிறது.

திருப்பதியில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கு அலர்மேல் மங்கைத்தாயர் பெரிய தாமரையில் அமர்ந்து, வேண்டியவருக்கு வேண்டிய வரத்தை தரக்கூடிய வகையில் பக்தர்களுக்கு அளிக்கும் அபய வரத ஹஸ்தத்தோடும் இரு கைகளிலும் மலர்களை ஏந்தி கொண்டும் தனி சன்னதியில் அருள்பாலிக்கின்றார்.

முகத்தில் இதமான புன்னகை பொலிய விழிகளில் தயை வெள்ளமென பாய்கிறது. ஏன் அஞ்சுகிறாய்? நான் இருக்கிறேன் பயப்படாதே என்று சொல்லாமல் சொல்லும் தாயாரின் விழிகள் அனைவரையும் தைரியமடையச் செய்கின்றன.

திருப்பூரில் உள்ள இந்த கோவில் மேல திருப்பதி என்று அழைக்கப்படுகிறது. கோவிலின் நுழைவாயிலில் த்வஜஸ்தம்பம் பலிபீடம் மற்றும் கொடிமரம் ஆகியவற்றை காணலாம். பிரதான தெய்வத்தை நோக்கி படி கருடாழ்வார் சிலை உள்ளது.  அவர் கைகளை கூப்பி இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறார். அடுத்து மகா மண்டபம் மற்றும் அர்த்தமண்டபம் உள்ளது. பக்தர்கள் இந்த இடத்திற்குள் நுழைந்தவுடன் ஓம் நமோ நாராயணா என்ற புனித முழக்கத்தை கேட்கின்றனர். நான்கு தெருக்களின் குறுக்கே கோவில் வசதியாக உள்ளது. கோவிலின் கருவறையில் முக்கிய தெய்வம் சுயம்பு வடிவில் காட்சி அளிக்கிறது. தொலைதூர மற்றும் அருகில் இருந்து வரும் பக்தர்களுக்கு கிழக்கு நோக்கி இறைவன் தரிசனம் தருகிறார்கள். தரிசனத்திற்கு பிறகு பக்தர்கள் கோவிலின் உள்பிரகாரத்திற்கு சென்றால் கடிகார திசையில் சுற்றி வரும்போது வேணுகோபாலசாமி சன்னதி மற்றும் சக்கரத்தாழ்வார் சந்நிதிகள் காணப்படுகின்றன. அப்போது பக்தர்கள் ஆஞ்சநேயரை தரிசனம் செய்யலாம்.

அலமேலுமங்கை ஆண்டாள் சந்நிதி நான்கு கரங்களுடனும் முகத்தில் புன்னகையுடனும் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். இறுதியாக கொடி மரம் அடையலாம். ஒவ்வொரு ஆண்டும் வைகுண்ட ஏகாதசி நன்னாளில் வைகுண்ட நாராயணமூர்த்தி தனது மனைவியான லட்சுமிதேவியுடன் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com