நித்ய பிரம்மச்சாரி ஸ்ரீ ஆஞ்சனேயன்!

நித்ய பிரம்மச்சாரி
ஸ்ரீ ஆஞ்சனேயன்!

''ஞானத்தின் உச்ச நிலை; பக்தியில் உச்ச நிலை; பலத்தில் உச்ச நிலை; வீரத்தில் உச்ச நிலை; கீர்த்தியில் உச்ச நிலை; சேவையில் உச்ச நிலை; வினயத்தில் உச்ச நிலை இவையெல்லாம் சேர்ந்த ஒரே ஸ்வரூபம் ஆஞ்சனேயனே!” என்கிறார் காஞ்சி மகாபெரியவர்.

பாரத நாடெங்கும் உள்ள பல்லாயிரக்கணக்கான திருத்தலங்களில், எண்ணற்ற திருநாமங்களுடன், விதவிதமான திருக்கோலங்களில் கோயில் கொண்டு அனுக்கிரகம் செய்து வரும் ஆஞ்சனேயர், வாயு தேவனின் அம்சமாக அஞ்சனா தேவிக்கு அவதரித்தவர் அனுமன். நித்ய பிரம்மச்சாரியான இவர் ஸப்த சிரஞ்சீவிகளுள் ஒருவர். நற்குணங்களின் இருப்பிடமான தன்னகரில்லா ராம பக்த அனுமனை வழிபடுவோருக்கு அனைத்து நலன்களும் கிட்டும்.

வேதங்களின் சிருஷ்டிகர்த்தாவான பிரம்மாவை ஞான மூர்த்தியாகவும், சூரிய தேவனை தனது குருவாகவும் கொண்டு ஞானத்தின் உச்ச நிலையைத் தனது கடின சேவையாலும் அபார குரு பக்தியாலும் பெற்ற ஆஞ்சனேயர், வாயு குமரன், வானர வீரன் என்றெல்லாம் அழைக்கப்படுபவர் ஜயவீர ஆஞ்சனேய சுவாமி.

ஜார்க்கண்ட் மாநிலத் தலைநகர் ராஞ்சியிலிருந்து வடகிழக்கில் சுமார் 130 கி.மீ. தொலைவில் உள்ளது அனுமன் பிறந்த அஞ்சனை கிராமம். ஊரைச்சுற்றி கட்வா நதி ஓடுகிறது. இதை அஞ்சனை ஆறு என்றே அனைவரும் அழைக்கின்றனர். இங்கே உள்ள குகைக்குள் மடியில் குழந்தை அனுமனுடன் திகழும் அஞ்சனா தேவியின் புராதனச் சிலை உள்ளது. இதை, 'பிராசீன் மூர்த்தி' என்கின்றனர். ஐந்து படிகளைக் கடந்து உயரே சென்றால் அனுமனுடன் காட்சி தரும் அஞ்சனையின் பளிங்குச் சிலையையும், சற்று இடப்புறத்தில் இடது கையில் சஞ்சீவி மலையைத் தூக்கிச்செல்லும், 'பஜ்ரங்பலியின் சிறிய விக்ரகமும், வலது கோடியில் அஞ்சனா தேவியின் புராதன விக்ரகமும் காட்சி தருகிறது.

த்தியபிரதேசம் மாநிலம், சிந்து வாடாவில், சாம்வலி என்ற இடத்தில் 'பள்ளி கொண்ட அனுமன்' கோயில் உள்ளது. நாக்பூரிலிருந்து சுமார் 20 கி.மீ. தொலைவில் இது உள்ளது. இந்தக் கோயில் கருவறையில் கதாயுதம் அருகில் இருக்க, கால் மேல் கால் போட்டுக்கொண்டு படுத்த நிலையில் கம்பீரமாகக்காட்சி தருகிறார் அனுமன். அரைக்கண் மூடிய நிலையில் இருக்கும் இவரைத் தூங்காமல் தூங்கும் நிலையில் உள்ளதாகக் கூறுவர். இதுபோன்ற தரிசனத்தை வேறெங்கும் காண்பது அரிது.

கான் ராமதாசர் கங்கை நதியில் கண்டெடுத்த அழகிய ஆஞ்சனேயர் விக்ரஹம், காசிமா நகரில் உள்ள அனுமன் கட்டத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. மூலவ மூர்த்தியான இந்த ஆஞ்சனேயர், தனது வலது கையைத் தலைக்கு மேல் தூக்கியும், இடது கையைக் கீழே தொங்கவிட்ட கோலத்திலும் காட்சி தருகிறார்.

காராஷ்டிரா மாநிலம், 'நான்தோரா' எனும் திருத்தலத்தில் நின்ற திருக்கோலத்தில் சுமார் 110 அடி உயரத்தில் ஆஞ்சனேயர் விஸ்வரூப வடிவில் காட்சி தருகிறார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com