தெய்வங்கள் பேசும் அமானுஷ்ய ஆலயம்!

தெய்வங்கள் பேசும் அமானுஷ்ய ஆலயம்!

பீஹாரில் பஸ்தார் என்னும் இடத்தில் அமைந்துள்ளது அருள்மிகு ராஜராஜேஸ்வரி திருபுரசுந்தரி ஆலயம். இந்தக் கோயிலுக்கு ஏராளமான பக்தர்கள் தினசரி வந்து செல்கின்றனர். பாரத நாட்டில் புராதன கோயில்கள் நிறைய இருந்தாலும், அவற்றில் ஒருசில கோயில்கள் மிகவும் விசித்திரமான விஷயங்களை உள்ளடக்கியுள்ளது.

அவற்றில் ஒன்றுதான் ஸ்ரீ ராஜராஜேஸ்வரி திரிபுரசுந்தரி திருக்கோயில். இந்தக் கோயிலில் இரவு நேரத்தில் தெய்வங்கள் ஒன்று கூடி பேசிக்கொள்வது போல் சப்தம் கேட்பது அவ்வூர் மக்களுக்கு ஆச்சரியமான விஷயமாக இருந்து வருகிறது. ஏறத்தாழ நானூறு ஆண்டுகள் பழைமை வாய்ந்த இந்த ஆலயம். ‘தாந்திரிக் பவானி மிஸ்ரா’என்பவரால் நிறுவப்பட்டது. அக்காலத்திலேயே தாந்த்ரீகம் மற்றும் வேத முறைப்படி எழுப்பப்பட்ட இக்கோயில், பக்தர்களால் மிகவும் பயபக்தியோடு வணங்கப்பட்டு வந்தது. அதனாலேயே ஏராளமான தாந்த்ரீகர்கள் மற்றும் வேத சாஸ்திரம் பயின்றவர்கள் இந்தக் கோயிலுக்கு வருகை தருகின்றனர்.

இக்கோயிலில் திரிபுரா, துமாவதி, பகுளாமுகி, தாரா, காளி, சின்ன மஸ்தா, ஷோடசி, மாதங்கி, கமலா, உக்ரதாரா, புவனேஸ்வரி ஆகிய தேவியர்களுக்கு சன்னிதிகள் அமைந்துள்ளன. கருவறையில் மூலவராக துர்கா தேவியே வீற்றிருக்கிறாள். இந்திய மக்களால் அதிக அளவில் வணங்கப்படும் தெய்வமாக துர்கா தேவியே இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்தியா மட்டுமல்லாமல், தமிழ்நாட்டிலும் தீயவற்றை அழிப்பதில் துர்கா தேவிக்கு தனிச் சிறப்பு உண்டு.

ந்தக் கோயிலில் தினசரி பூஜைகள் முடிந்து கோயில் நடையைச் சாத்திவிட்டு அனைவரும் சென்ற பிறகு அக்கோயிலில் வீற்றிருக்கும் தெய்வங்கள் ஒருவருக்கொரும் பேசிக்கொள்ளும் சப்தம் கேட்கிறது. தெய்வங்கள் பேசும் இந்த சப்தம் வெளியில் மதில் சுவர் வரை கேட்பதாக இப்பகுதி மக்கள் கூறுகின்றனர். இதற்காகவே இந்தக் கோயில் பக்தர்களிடையே மிகவும் பிரபலமாக உள்ளது.

தெய்வங்கள் பேசும் இந்த நிகழ்வு உண்மைதானா என ஆராய்ச்சி செய்வதற்கு விஞ்ஞானிகள் குழு ஒன்று இக்கோயிலுக்கு வருகை தந்து ஒரு நாள் இரவு முழுவதும் அங்கு தங்கி இருந்தனர். வழக்கமாக இரவு நேரத்தில் பக்தர்கள் யாரும் இக்கோயிலில் தங்குவதற்கு அனுமதிக்கப்படுவதில்லை. இரவில் தெய்வங்கள் ஒருவரோடு ஒருவர் பேசும் சப்தம் கோயில் மதில் சுவர் வரை எதிரொலிப்பது உண்மைதான் என்பதை அந்த ஆராய்ச்சி செய்ய வந்த குழு உறுதி செய்துவிட்டுச் சென்றது. அதுமட்டுமின்றி, இந்த பேசும் சப்தம் மனிதர்கள் பேசுவதைப் போலவே எதிரொலிக்கிறது. ஆனால், நிச்சயமாக அது இந்தக் கோயிலின் வெளியில் இருந்து வரவில்லை என்பதை விஞ்ஞானிகள் குழு உறுதி செய்தது. மேலும், எதனால் இதுபோன்ற பேச்சு சப்தம் எழுகிறது என்று தெரியாமலும் குழப்பத்தில் ஆழ்ந்தது ஆராய்ச்சி செய்த வந்த அந்த விஞ்ஞானிகள் குழு.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com