சிதம்பரம் நடராஜர் கோயில் ஆருத்ரா தரிசனம் கொடியேற்றம்!

சிதம்பரம் நடராஜர் கோயில் ஆருத்ரா தரிசனம் கொடியேற்றம்!

உலகப் புகழ்பெற்ற கோவிலான சிதம்பரம் (தில்லை) அன்னை சிவகாமசுந்தரி உடனுறை அருள்மிகு நடராசப்பெருமான் திருக்கோயில் மார்கழி மாத ஆருத்ரா தரிசன விழா, கொடியேற்றத்துடன் இன்று (28.12.22) காலை கோலாகலமாக துவங்கியுள்ளது.

சிதம்பரத்தில் அமைந்திருக்கும் இந்த நடராஜர் ஆலயத்தில் ஆண்டுதோறும் இரண்டு உற்சவங்கள் நடைபெறுகிறது. ஆணி திருமஞ்சனம் மற்றும் மார்கழியில் ஆருத்ரா தரிசனம்.

அதன்படி, இந்த ஆண்டுக்கான ஆண்டு ஆருத்ரா தரிசன விழா, பத்து நாள் உற்சவமாக, பக்தர்கள் முன்னிலையில், தீக்ஷிதர்கள் வேதமந்திரங்களை ஒலிக்க சிவனடியார்கள் சிவ கணங்கள் வாசிக்க, கைலாயவாத்தியமும் முழங்க இன்று (28.12.2022) கோலாகலமாய் ஆருத்ரா தரிசன கொடியேற்ற நிகழ்வு தொடங்கியது.

இந்நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இரவு தங்கம், வெள்ளி வாகனங்களில் பஞ்சமூர்த்திகள் வீதிஉலா நடக்கிறது.

Chidambaram Sri Natarajar Temple Margazhi Aarudhra Festival 2022

28.12.22 (இன்று) - கொடியேற்றம்

29.12.22-இரவு வெள்ளி_சந்திரபிரபை வாகன வீதி உலா

30.12.22- இரவு தங்க சூரியபிரபை வாகன வீதி உலா

31.12.22- இரவு வெள்ளி_பூத வாகனத்தில் வீதி உலா

01.01.2023- இரவு வெள்ளி ரிஷப வாகனத்தில் தெருவடைச்சான் வீதி உலா.

02.01.2023- இரவு வெள்ளி யானை வாகன வீதி உலா

03.01.2023- இரவு தங்க_கயிலாய வாகன வீதி உலா

04.01.2023- மாலை தங்கரதத்தில் பிச்சாடன மூர்த்தி வீதி உலா. அருள்மிகு சோமாஸ்கந்தர் வெட்டுங்குதிரையில் பவனி.

05.01.2023- வியாழன் (Thursday)அதிகாலை 4.30-5 மணிக்கு அன்னை சிவகாமி, அருள்மிகு ஆனந்த நடராசப்பெருமான் திருத்தேருக்கு எழுந்தருளல். மாலை 6 மணிக்கு மேல் திருத்தேரில் இருந்து ஆயிரங்கால் மண்டபம் எழுந்தருளல் Chariot festival

06.01.2023- வெள்ளி ஆருத்ரா அபிஷேகம் அதிகாலை 2 மணி முதல் 6 மணி வரை . காலை 10 மணிக்கு மேல் இராஜசபையில் பக்தர்களுக்கு காட்சியளித்தல். பகல் 2 மணிக்கு மேல் இராஜசபையில் இருந்து சிற்சபைக்கு அன்னை சிவகாமி, அருள்மிகு நடராசப்பெருமான் எழுந்தருளல் ஆரூத்ரா தரிசனம்.

Aarudhra Abisekam-2am-6am.

Aarudhra dharshan around 2 noon.

07.01.2023 - இரவு முத்துப்பல்லக்கு காட்சி.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com