திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் மார்கழி மாத திருவிழா...!

sri villiputhur
sri villiputhur

திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் திருவில்லிபுத்தூரில் அமைந்துள்ள பழமையானதும், ஆழ்வார்களுள் பெரியாழ்வார் மற்றும் ஆண்டாள் அவதரித்த திருத்தலம் மற்றும் 108 திவ்ய தேசங்களில் ஒன்றான இந்து மத வைணவ கோவில் ஆகும். சூடித்தந்த சுடர்கொடி என்று போற்றப்படும் ஸ்ரீவில்லிபுத்தூர், ஆண்டாள் பிறந்த பூமி புண்ணிய பூமியாக போற்றப்படுகிறது. விருது நகரில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் ஆண்டுதோறும் மார்கழி மாத திருவிழா வெகு சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.

அதன்படி, இந்த ஆண்டு மார்கழி திருவிழா வருகிற 23ஆம் தேதி பல்வேறு நிகழ்ச்சியுடன் தொடங்குகிறது. இந்த விழா 15ஆம் தேதி வரை நடக்கிறது. ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் ரவிச்சந்திரன், நிர்வாக அதிகாரி முத்துராஜா மற்றும் அதிகாரிகள் முன்னின்று செய்து வருகின்றனர்.

Andal thayar
Andal thayar

நிகழ்ச்சி நிரல்கள் :

அன்றைய தினம் மாலை 5 மணிக்கு ஆண்டாள், ரெங்க மன்னார் ஆண்டாள் பிறந்த வீட்டிற்கு வருகின்றனர். அங்கு அவருக்கு பச்சை காய்கறிகள் பரப்பி வரவேற்பு அளிக்கப்படுகிறது. பிறந்த வீட்டிற்கு வந்த ஆண்டாள் வேதபிரான் பட்டர் திருமாளிகையில் பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். அதன் பிறகு பகல்பத்து மண்டபத்திற்கு செல்கிறார்.

இந்த ராப்பத்து திருவிழாவானது 11ஆம் தேதி வரை ராப்பத்து உற்சவம் ராப்பத்து மண்டபத்தில் நடைபெறுகிறது. இதையொட்டி நாள்தோறும் ஆண்டாள், ரெங்கமன்னார் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அலங்காரத்தில் ஆண்டாள் பக்தர்களுக்கு காட்சி அளிப்பார்.

அதனைத் தொடர்ந்து, 10 நாட்கள் நடைபெறும் பகல் பத்து உற்சவம் 2023 ஜனவரி 1ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. ஜனவரி 2ஆம் தேதி காலை 6.30 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது. இதை தொடர்ந்து ராப்பத்து திருவிழா தொடங்குகிறது.

ஜனவரி 7ஆம் தேதி பிரியாவிடை உற்சவம் நடைபெறுகிறது. தொடர்ந்து உச்சநிகழ்ச்சியாக மார்கழி நீராட்ட எண்ணெய் காப்பு உற்சவ விழா 8ஆம் தேதி எண்ணெய் காப்பு மண்டபத்தில் தொடங்குகிறது.

ஆண்டாள் எண்ணெய் காப்பு சிறப்புகள்:

திருவில்லிபுத்தூர் திருக்கோயிலில், மார்கழி மாதம் ஆண்டாள் எண்ணெய்க்காப்புக்கு 61 வகை மூலிகைகள் அடங்கிய 40 நாட்களில் காய்ச்சிய தைலம் பயன்படுத்தப்படுகின்றது. நல்லெண்ணெய், பசுப்பால், நெல்லிக்காய், தாழம்பூ, இளநீர் முதலான பல பொருட்கள் சேர்த்து ஏழுபடி எண்ணெய்விட்டு இரண்டு பேர் நாற்பது நாட்கள் காய்ச்சுவர். இதில் நாலுபடி தைலம் கிடைக்கும். மார்கழி மாதத்தின் ஆண்டாள் எண்ணெய்க்காப்பு உற்சவத்தின் எட்டு நாட்களிலும் ஆண்டாளுக்கு இந்தத் தைலமே சாற்றப்படுகின்றது. மார்கழி மாதம் முடிந்த பின்னர் பக்தர்களுக்குப் பிரசாதமாக இந்தத் தைலப்பிரசாதம் தரப்படுகின்றது. பக்தர்களால் நோய் தீர்க்கும் மருந்தாக இந்தத் தைலம் நம்பப்படுகின்றது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com