ஆன்மிக அற்புதங்கள்!

ஆன்மிக அற்புதங்கள்!

1. ஸ்ரீரங்கம் கோயிலில் ஸ்ரீராமானுஜரின் உடல் ஆயிரம் வருடங்களாகக் கெடாமல் அப்படியே உள்ளது.

2. திருநெல்வேலி, பாளையங்கோட்டைஅருகே திருச்செந்தூா் சாலையில் உள்ள சிரட்டை பிள்ளையாா் கோயில் விநாயகருக்கு விடலை போடும்போது சிரட்டையும், தேங்காயும் தனித்தனியாகப் பிரிந்து சிதறுகிறது.

3. தஞ்சை பிரகதீஸ்வரர் கோயிலில் 72 டன் கல் கோபுர உச்சியில் வைக்கப்பட்டுள்ளது. கருவறை குளிர்காலத்தில் வெப்பமாகவும் வெயில் காலத்தில் குளிராகவும் இருக்கிறது.

4. தாராபுரம் ஐராவதீஸ்வரர் கோயிலில் உள்ள இசைப்படிகளில் தட்டினால், ‘சரிகமபதநி’ என்ற ஓசை வருகிறது.

5. கடலுக்கு 3500 அடி உயரத்தில் உள்ள வெள்ளியங்கிரி மலையில் சிவனின் பஞ்சவாத்ய ஒலி கேட்கிறது.

6. கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே கோட்டையூரில் நூற்றி ஒன்று சாமிமலை குகையில் ஓரடி உயரம் கொண்ட கல்லால் ஆன அகல் விளக்கில் இளநீர் விட்டு தீபமேற்றினால் பிரகாசமாக எரியும் அதிசயம் நடக்கிறது.

7. சென்னை, வியாசர்பாடி ரவீஸ்வரர் கோயிலில் தினமும் சூரிய ஒளி மூலவா் மீது விழுகிறது. (காலை, மதியம், மாலை என மும்முறை.)

8. சுசீந்திரம் சிவன் கோயிலில் ஒரு சிற்பத்தின் காதில் குச்சியை நுழைத்தால், மறு காது வழியாக வெளியே வருகிறது.

9. திருப்பூர், குண்டடம் வடுகநாத பைரவர் கோயிலில் தாயின் வயிற்றில் இருக்கும் குழந்தை, இந்த மாதத்தில் இந்தந்த வடிவத்தில் இருக்கும் என்பதை பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கல்லில் சிற்பங்களாக வடித்து வைத்துள்ளார்கள் நம் முன்னோர்கள்.

10. செங்கம் ஊரில் உள்ள ஸ்ரீ அனுபாம்பிகை உடனுறை ரிஷபேஸ்வரர் கோயிலில் ஆண்டுக்கு ஒருமுறை, பங்குனி மாதம் மூன்றாம் நாள், மாலை சூரிய அஸ்தமனத்தின்பொழுது, நந்தியம் பெருமான் மீது சூரிய ஒளி விழுகையில், அவர் தங்க நிறத்தில் ஜொலிப்பார்.

11. ஜெயங்கொண்டத்தில் உள்ள கங்கைகொண்ட சோழபுரம் கோயிலில் உள்ள கிணற்றுக்கு அருகில் ஒரு சிங்கத்தின் சிற்பம் இருக்கும். சிங்கத்தின் வாயில் ஒரு கதவு தென்படும். அதன் மூலம் கீழே இறங்கினால் கிணற்றில் குளிக்கலாம். ஆனால், மேலேயிருந்து பார்த்தால் நாம் குளிப்பது யாருக்கும் தெரியாது.

மடவிளாகம் சிவன் கோயில்
மடவிளாகம் சிவன் கோயில்

12. ஈரோடு, காங்கேயத்துக்கு அருகில், மடவிளாகம் சிவன் கோயில் குளத்தில், பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒரு மண் பானை நிறைய விபூதி தோன்றுகிறது.

13. மதுரை மீனாட்சி அம்மன் கோயில் தெப்பக்குளத்தில் மீன்கள் வசிப்பதில்லை.

14. சேலம், தாரமங்கலம் பெருமாள் கோயிலில் ஸ்ரீராமா் சிற்பம் இருக்கும் இடத்திலிருந்து வாலி சிற்பம் இருப்பதைப் பாா்க்க முடியும். ஆனால், வாலி சிற்பம் இருக்கும் இடத்திலிருந்து ஸ்ரீராமரைப் பாா்க்க முடியாதபடி அமைக்கப்பட்டுள்ளது.

15. சென்னை, முகப்பேர் அருள்மிகு காிவரதராஜப்பெருமாள் கோயிலில் விளக்குகளை அணைத்துவிட்டால் பெருமாள் நம்மை நோில் பாா்ப்பது போல் காட்சி தருகிறார்.

16. தென்காசி அருகில் புளியங்குடியில் சுயம்பு நீரூற்று வற்றி தண்ணீா் இல்லாமல் இருக்கும்போது பிராா்த்தனை செய்து, பால் அல்லது இளநீா் விட்டால் மறுநாள் ஊற்றில் நீர் வந்துவிடுகிறது.

17. தூத்துக்குடி மாவட்டம், செட்டியாபத்து கிராம பொியசாமி கோயிலில், கோயிலுக்கு நோ்ந்துவிடப்படும் பன்றி கொடை விழாவின்போது அங்குள்ள நீர் தொட்டிக்குள் தலையை தானாகவே மூழ்கி இறந்துவிடுகிறது.

18. குளித்தலை அருகில் அமைந்த ரத்தினகிாி மலை மேல் காகங்கள் பறப்பதில்லை.

19. தேனி அருகில் உள்ள சிவன் கோயிலில் அவரவா் உயரத்துக்கு ஏற்ப சிவலிங்கம் காட்சி தருகிறது.

20. தூத்துக்குடி மாவட்டம், வீரபாண்டியபுரம் அம்மன் கோயில் கொடை விழாவின்போது மண் பாணையில் வைக்கப்படும் கத்தி, சாமி கோயிலை வலம் வந்து சேரும் வரை செங்குத்தாக நிற்கிறது.

21. விருதுநகர், மகான் திருப்புகழ்சாமி கோயில் திருவிழாவின்போது சுவாமிக்கு படைக்கப்பட்ட சாதத்தில் வேல் வைத்து பூஜை செய்கின்றனா். அதன் பின் எவ்வளவு பக்தா்கள் வந்தாலும் உணவு குறையாமல் வந்துகொண்டே இருக்கிறது. (வேலை எடுத்தவுடன் குறைந்து காலியாகிவிடும்.) இதுபோல் உணவு தட்டாமல் வருவது அத்திாி மலையிலும் நடைபெறுகிறது.

22. திருமந்திரநகா் (தூத்துக்குடி) சிவன் கோயிலில் சித்திரைத் தோ்த் திருவிழாவின்போது தோ் ஓடும் ரத வீதி மட்டும் சுடுவதில்லை.

23. சென்னிமலை முருகனுக்கு அபிஷேகம் செய்யப்படும் தயிா் புளிப்பதில்லை.

24. திருப்புவனம் (சிவகங்கை மாவட்டம்) அருகில் கல்லுமடை திருநாகேஸ்வரமுடையாா் கோயிலில் மீனாட்சி அம்மன் விக்ரஹம் இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை நிறம் மாறுகிறது.

25. திருநெல்வேலி, கடையநல்லூர் அருகில் சுந்தரேஸ்வரபுரம் அருள்மிகு சுந்தரேஸ்வரர் கோயில் பிராகாரத்தில் உள்ள விளக்குகளை அணைத்துவிட்டால் வெளியே உள்ள ஒளி மூலவர் மீது விழுவதைக் காணலாம்.

அருள்மிகு கல்யாணசுந்தரேஸ்வரர்
அருள்மிகு கல்யாணசுந்தரேஸ்வரர்

26. திருநல்லூர் அருள்மிகு கல்யாணசுந்தரேஸ்வரர் (பஞ்சவர்ணேஸ்வரர்) திருக்கோயிலில் சிவலிங்கம் ஆறு நாழிகைக்கு ஒரு முறை நிறம் மாறுகிறது.

27. காசியில் கருடன் பறப்பதில்லை; மாடு முட்டுவதில்லை; பிணம் எரிந்தால் நாற்றம் எடுப்பதில்லை; பூக்கள் மணம் வீசுவதில்லை.

28. திண்டுக்கல் அருகே திருமலைக்கேணி முருகன் கோயிலில் அருகருகே அமைந்த தெய்வானை சுனையின் நீர் எப்போதும் குளிர்ச்சியாகவும், வள்ளி சுனை நீர் இரவு, பகல் எந்நேரமும் வெந்நீராகவும் உள்ளது.

29. திருக்கழுக்குன்றம் தெப்பக்குளத்தில் பன்னிரண்டுஆண்டுகளுக்கு ஒருமுறை சங்கு தோன்றுகிறது.

30. திருநாகேஸ்வரம் சிவன் கோயிலில் ராகுகாலத்தில் சிவபெருமானுக்கு செய்யப்படும் அபிஷேகப் பால் மட்டும் நீல நிறமாகிறது.

31. சிக்கல் சிங்காரவேலர் கோயிலில் சூரசம்ஹாரத்துக்காக முருகன் அம்பிகையிடம் வேல் வாங்கும்போது முருகனின் திருமேனி முழுவதும் வியர்வை பெருகுகிறது. அா்ச்சகா் பட்டுத்துணியால் அதை ஒற்றி எடுக்க, துணி தொப்பலாக நனைந்து விடுகிறது.

32. நாகர்கோவில், கேரளபுரம் சிவன் கோயிலில் உள்ள ஒரு விநாயகர் ஆறு மாத காலம் கருப்பாகவும், ஆறு மாதம் வெண்மை நிறமாகவும் காட்சி தருகிறார். அது சமயம், நாகா்கோவில் நாகராஜா கோயிலில் கொடுக்கப்படும் மண் கருப்பாகவோ அல்லது வெள்ளையாகவோ இருக்கிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com