வித்தியாசமான வேண்டுதல்கள்!

வித்தியாசமான வேண்டுதல்கள்!

ராமநாதபுரத்தில் உள்ள அழகுவள்ளி அம்மனுக்கு பக்தர்கள் சாக்குகளால் தைக்கப்பட்ட ஆடைகளை அணிந்து வேண்டுதல் நிறைவேற்றுகின்றனர். 100 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வரும் இந்த வழிபாட்டின் மூலம் பக்தர்கள் என்ன வேண்டிக் கொண்டாலும் நிறைவேறும் என்று இப்பகுதி மக்களின் நம்பிக்கை.

டலூர் வெள்ளி மோட்டான் தெருவில் அமைந்துள்ள சோலைவாழி மாரியம்மன் கோவிலில், ஆண் குழந்தை வேண்டும் என வேண்டிக்கொள்ளும் தாய்மார்கள், தங்களின் வேண்டுதல் நிறைவேறியதும் பிறந்த ஆண் பிள்ளைகளுக்கு பெண் வேடமிட்டு அம்மனுக்கு நேர்த்தி கடன் செலுத்தும் வினோத வழிபாடு ஆண்டுதோறும் மார்கழி மாதத்தில் நடப்பது வழக்கம்.

சேலம் மாவட்டம், கல்வராயன் மலை வெள்ளாறு கிராமத்தில், மக்கள் காவல் தெய்வமாக வணங்கி வரும் சேட்டு முனியப்பன் கோவிலில், பிரார்த்தனை நிறைவேறினால் பக்தர்கள், பிளாஸ்டிக் சேர்களை காணிக்கையாக செலுத்தி வருகின்றனர். இதனால் இக்கோவில் முழுவதும் நூற்றுக்கணக்கான பிளாஸ்டிக் சேர்கள் குவிந்து காணப்படுகின்றன.

ரியானா மாநிலத்தில் அம்பாலா மற்றும் குருஷேத்ரா இடையே உள்ள நவ் காஜா பீர் எனும் கோவிலில், லாரி டிரைவர்கள் மற்றும் பயணிகள், பயணத்தின் போது தங்கள் இலக்கை பாதுகாப்புடன் உரிய நேரத்தில் சென்றடைய இந்த கோவிலுக்கு வந்து, தங்கள் வேண்டுதல் நிறைவேற கடிகாரம், கடுகு எண்ணெய் மற்றும் துணிகளை காணிக்கையாக செலுத்துகின்றனர். 

ர்நாடக மாநிலம் மைசூரு - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள மாண்டியா நகரில் இருந்து 2 கி.மீ தொலைவில் கொடிகல்லினா காடு பசப்பா கோவிலில் கிராம மக்கள் அறுவடை முடிந்து, கற்களை மட்டுமே காணிக்கையாக வழங்கி, நல்ல விளைச்சலுக்கு நன்றி தெரிவித்து வணங்குவது வழக்கம்.

திருவாரூரில் உள்ள வெண்ணி கரும்பேஸ்வரர் கோயில். சர்க்கரை வியாதியை போக்கக் கூடிய கோயிலாக உள்ளது. சர்க்கரை நோய் உள்ளவர்கள் இந்த கோயிலில் சர்க்கரை மற்றும் ரவையை சேர்த்து வெண்ணி கரும்பேஸ்வரருக்கு அர்ச்சனை செய்து பிரகாரத்தை வலம் வந்து பின்னர் பிரகாரத்தில் தூவினால், சர்க்கரையை மட்டும் எறும்புகள் திண்றுவிட்டால், அவர்களுக்கு உடனே சர்க்கரை நோய் குறைவதாக ஐதீகம். வேண்டுதல் நிறைவேறினால் இங்கு வந்து சர்க்கரைப் பொங்கல் படைத்து தன் நேர்த்திக்கடனை தீர்க்கின்றனர்.

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன் சத்திரம் என்ற ஊரில் குழந்தை வேலப்பர் என்ற முருகன் குடி கொண்டி ருக்கிறார். குழந்தை இல்லாதவர்கள் குழந்தை வரம் வேண்டி இவரை பிரார்த்திப்பார்கள். வேண்டுதல் நிறைவேறினால் சாக்லெட்டினால் மாலை கட்டி போடுவார்கள். இவரை சாக்லெட் முருகன் என்றே அழைக்கிறார்கள். 

விருதாச்சலத்தில் உள்ள கொளஞ்சியப்பர் முருகன் கோவிலில் உலகத்தில் எந்த கோயிலும் இல்லாத வழிபாட்டு முறையாக இந்த கோவிலில் பிராது கொடுக்கும் முறை பின்பற்றப்படுகிறது. கொளஞ்சி அப்பர் கோவிலில் அமர்ந்து ஒரு வெள்ளை தாளில் தங்களது பிரார்த்தனையை எழுதி கோவில் நிர்வாகத்திடம் கொடுத்தால் அவர்கள் இங்கு உள்ள மரத்தில் அதை கட்டி வைப்பார்கள்.

பிராது கொடுத்த மூன்றே மாதத்தில் வேண்டுதல் நிறைவேறும் என்பது நம்பிக்கை. பின்பு மூன்று மாதத்தில் வேண்டுதல் நிறைவேறினால் கோவிலுக்கு வந்து பிராது வாபஸ் கட்டணத்தை கட்டி பிராது பேப்பரை கிழித்து போட வேண்டும். வேண்டுதல் நிறைவேறியதை எழுதி முருகனிடம் சமர்ப்பிக்க வேண்டும். உலகில் எந்த கோவிலிலும் இல்லாத வழிபாட்டு முறையாக கருதப்படும் இதில் பலர் தங்கள் வேண்டுதலை வேண்டி தீர்வை பெற்றுள்ளனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com