மாறாத அழகு தரும் லவண தானம்!

மாறாத அழகு தரும் லவண தானம்!

லருக்கும் இளமையில் இருக்கும் வனப்பும் அழகும் முதுமையில் இருப்பதில்லை. அதில் நிறைய பேருக்கு மனதில் வருத்தம் கூட இருக்கும். குறிப்பாக, பெண்கள் தங்கள் அழகைப் பேணிக்காப்பதில் மிகவும் கவனமாக இருப்பார்கள். இளமையின் அழகும் வனப்பும் முதுமையிலும் ஓரளவுக்குக் குறையாமல் இருப்பதற்கு ஆன்மிகத்தில் ஒரு பரிகாரம் சொல்லப்படுகிறது. அதுதான், ‘லவண தானம்.’

‘லவண தானமா? அப்படி என்றால் என்ன என்றுதானே கேட்கத் தோன்றுகிறது. ‘லவணம்’ என்றால் உப்பு என்று பொருள். மார்கசீர்ஷ பௌர்ணமியான இன்று, நாம் உணவுக்குப் பயன்படுத்தும் கல் உப்பை வாங்கி ஏழைகளுக்கு தானம் கொடுப்பதுதான் ‘லவண தானம்’ எனப்படும்.

இன்று பூஜைக்குப் பிறகு சுத்தமான கல் உப்பை ஒரு பாத்திரத்தில் போட்டு வைத்துக் கொண்டு, அதனுடன் துளசி மற்றும் தட்சணைப் பணத்தோடு,

‘ரஸானா மக்ரஜம் ஸ்ரேஷ்டம்

லவணம் பலவர்த்தனம் தஸ்மாதஸ்ய

ப்ரதானேன அத: சாந்திம் ப்ரயஸ்சமே.

மார்க்கசீர்ஷ பூர்ணிமா

மஹாபுண்ய காலே

மம ஸஹ குடும்பஸ்ய ஸதா

ஸுந்தர ரூபத்வ ஸித்தியர்த்தம்

இதம் லவணம் ச பத்ரம் ஸம்ப்ரததே’

என்ற மந்திரத்தைச் சொல்லி, அதை கீழே வைத்து நமஸ்காரம் செய்ய வேண்டும். பிறகு அதை ஏழை ஒருவருக்கு தானமாகக் கொடுத்து விட வேண்டும்.

இது தவிர, பலருக்கும் இன்று கல் உப்பு வாங்கி தானமாகத் தரலாம். ‘இப்படி கல் உப்பை தானம் செய்பவருக்கும் அவர் குடும்பத்தினருக்கும் அழகான தோற்றப் பொலிவு ஏற்படும். மேலும், எப்போதும் அவர்களின் அழகும் இளமையும் குறையாது இருக்கும்’ என்கிறது, ‘நிர்ணய ஸிந்து’ எனும் நூல்.

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com