விஞ்ஞானம் இன்று கூறுவதை அன்றே சாட்சியாக்கிய இந்து மதம்!

விஞ்ஞானம் இன்று கூறுவதை அன்றே சாட்சியாக்கிய இந்து மதம்!

ல கோடி ரூபாய் செலவு செய்து, ஆராய்ச்சியின் மூலம் சிதம்பரம் நடராஜர் கால் பெருவிரலில்தான் பூமியின் காந்த மையப் புள்ளி (Centre Point of World’s Magnetic Equator) இருப்பதாக உலக நாடுகள் விஞ்ஞானத்தின் மூலம் கண்டுபிடித்துள்ளன. இதனை ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கண்டறிந்து திருமந்திரத்தில் குறிப்பிட்ட திருமூலரின் சக்தி ஒட்டுமொத்த உலக விஞ்ஞானிகளின் ஆராய்ச்சிக்கும் மேல்பட்டது. திருமூலரின் திருமந்திரம் உலகுக்கே வழிகாட்டும் மிகப்பெரிய அறிவியல் நூலாகும்.

சிதம்பரம் நடராஜர் கோயில் ரகசியம் என்று பலரும் பல விஷயங்களைக் கூறிவரும் வேளையில், அந்தக் கோயிலில் இருக்கும் அறிவியல், பொறியியல், புவியியல், கணிதவியல், மருத்துவவியல் குறித்த ஆச்சர்யங்களின் சில அற்புதமான ரகசியங்கள்தான் இவை. பஞ்சபூதக் கோயில்களில் ஆகாயத்தைக் குறிப்பது தில்லை நடராஜர் ஆலயம். மனித உடலை அடிப்படையாகக் கொண்டு அமைக்கப்பட்டிருக்கும் சிதம்பரம் கோயிலின் ஒன்பது நுழைவு வாயில்களும், மனித உடலில் இருக்கும் ஒன்பது துவாரங்களைக் குறிக்கின்றன. இக்கோயில் விமானத்தின் மேல் அமைந்த பொற்கூரை 21,600 தங்கத் தகடுகளைக் கொண்டு வேயப்பட்டுள்ளது. இது மனிதன் ஒரு நாளைக்கு சராசரியாக 21,600 முறை சுவாசிப்பதைக் குறிக்கின்றது. இந்த 21,600 தகடுகளை வேய 72,000 தங்க ஆணிகள் பயன்படுத்தப் பட்டுள்ளன. இந்த 72,000 என்ற எண்ணிக்கை மனித உடலில் இருக்கும் ஒட்டுமொத்த நாடிகளைக் குறிக்கின்றது.

திருமந்திரத்தில் திருமூலர், ‘மானுடராக்கை வடிவு சிவலிங்கம், மானுடராக்கை வடிவு சிதம்பரம், மானுடராக்கை வடிவு சதாசிவம், மானுடராக்கை வடிவு திருக்கூத்தே’ என்று கூறுகிறார். அதாவது, ‘மனிதன் வடிவில் சிவலிங்கம், அதுவே சிதம்பரம், அதுவே சதாசிவம், அதுவே அவரின் நடனம்’ என்ற பொருளைக் குறிக்கின்றது.

சற்றே இடது புறமாக அமைந்திருக்கும், ‘பொன்னம்பலம்’ நம் உடலின் இதயத்தைக் குறிப்பதாகும். இந்த இடத்தை அடைய ஐந்து படிகள் ஏற வேண்டும். இந்தப் படிகள், ‘பஞ்சாட்சரப் படி’ என்று அழைக்கப்படுகின்றது, அதாவது ‘சி,வா,ய,ந,ம’ என்ற ஐந்து எழுத்தே அது. ‘கனக சபை’ பிற கோயில்களில் இருப்பதைப் போன்று நேரான வழியாக இல்லாமல் பக்கவாட்டில் வருகின்றது. இந்த கனக சபையைத் தாங்க நான்கு தூண்கள் உள்ளன. இது நான்கு வேதங்களைக் குறிப்பதாகும்.

பொன்னம்பலத்தில் 28 தூண்கள் உள்ளன. இவை 28 ஆகமங்களையும், சிவனை வழிபடும் 28 வழிகளையும் குறிக்கின்றன. இந்த 28 தூண்களும் 64+64 மேற்பலகைகளைக் கொண்டுள்ளது. இது, 64 கலைகளைக் குறிக்கின்றது. இதன் குறுக்கில் செல்லும் பல பலகைகள் மனித உடலில் ஓடும் பல ரத்த நாளங்களைக் குறிக்கின்றன. பொற்கூரையின் மேல் இருக்கும் ஒன்பது கலசங்கள், ஒன்பது வகையான சக்தியைக் குறிக்கின்றன. அர்த்த மண்டபத்தில் உள்ள ஆறு தூண்கள், ஆறு சாஸ்திரங்களையும், அர்த்த மண்டபத்தின் பக்கத்தில் உள்ள மண்டபத்தில் உள்ள 18 தூண்கள், பதிணென் புராணங்களையும் குறிக்கின்றன.

சிதம்பரம் திருத்தலத்தில் அருளும் நடராஜர் ஆடிக் கொண்டிருக்கும் ஆனந்தத் தாண்டவக் கோலம், ‘cosmic dance’ என்று பல வெளிநாட்டு அறிஞர்களால் அழைக்கப்படுகின்றது. விஞ்ஞானம் இன்று சொல்வதை இந்து மதம் அன்றே சாட்சியாக்கியுள்ளது அதிசயமே!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com