‘சப்த’ கிரகம் ‘நவ’க்கிரகம் ஆனது எப்படி?

‘சப்த’ கிரகம் ‘நவ’க்கிரகம் ஆனது எப்படி?

வக்கிரகங்களின் அசைவுகள் இல்லையெனில் மனிதர்களின் அசைவுகள் இல்லை. ‘கிரகம்’ என்றாலே, ‘பற்றி இருப்பது’ என்று பொருள். நவக்கிரக நாயகர்களின் வழிபாடு ஆகமங்களில் பேசப்படுகிறது. கிரியாபாதமான சிவ பூஜையில் நவக்கிரக வழிபாடு இடம் பெற்றிருக்கிறது. சிவாலயங்களிலும் நவக்கிரக வழிபாடு நடந்து வருகிறது. சிவாலயங்களில் நவக்கிரகப் பிரதிஷ்டை இரண்டு விதமாக அமைந்திருக்கிறது. ஒன்று ஆகமப் பிரதிஷ்டை என்றும், மற்றொன்று வைதீகப் பிரதிஷ்டை என்றும் கூறப்பெறும். ஆலங்களில் கர்ப்பகிருகத்துக்கு வடகிழக்கு திசையில்தான் நவக்கிரகப் பிரதிஷ்டை செய்யப்பெறும்.

ஆகமப் பிரதிஷ்டையில் நடுவில் சூரியனும், அவருக்குக் கிழக்கே சந்திரனும், தெற்கே புதனும், மேற்கு குருவும், வடக்கே சுக்ரனும், தென்கிழக்கே செவ்வாயும், தென்மேற்கே சனீஸ்வரரும், வடமேற்கே ராகுவும், வடகிழக்கே கேதுவும் அமைத்திருப்பார்கள்.

வைதீக பிரதிஷ்டையில் நடுவில் சூரியன் இருப்பார். அவருக்குக் கிழக்கே சுக்ரனும், தெற்கே செவ்வாயும், மேற்கே சனீஸ்வரரும், வடக்கே குருவும், தென்கிழக்கே சந்திரனும், தென்மேற்கே ராகுவும், வடமேற்கே கேதுவும், வடகிழக்கே புதனும் அமைத்திருப்பர். இப்படி இரு வகையிலும் நவக்கிரகங்களை ஆலயங்களில் பிரதிஷ்டை செய்வதுண்டு.

தியில் கிரகங்களின் எண்ணிக்கை ஏழாக இருந்தது. பிறகு அவை ஒன்பதாக நவக்கிரகங்கள் ஆனது எப்படி?

ஆதிசேஷனைக் கயிறாகவும், மேரு மலையை மத்தாகவும் கொண்டு தேவர்களும் அசுரர்களும் திருப்பாற்கடலைக் கடைந்தபோது அமிர்தம் வெளிப்பட்டது. அலைமகள் நாதனான மகாவிஷ்ணு, ‘மோகினி’ திருவுருவம் தாங்கி, தேவர்களுக்கு அமுதம் வழங்கினார். அப்போது, ‘ஸைம்ஹிதேயன்’ என்ற தானவனான அசுரன் கள்ளத்தனமாக தேவ வேஷம் பூண்டு அமிர்தம் புசித்தான். அதனைஅறிந்த மோகினி வேஷம் பூண்ட மகாவிஷ்ணு அமிர்த கரண்டியால் அவனது தலையில் ஓங்கி அடிக்க, அதனால் அவனது தலை வேறு, உடல் வேறானது.

ஸைம்ஹிதேயனின் தலைப்பகுதி அசுரன் தலையாகவும், உடற்பகுதி பாம்பின் உடலாகவும் மாறிப்போனது. ஆகவே இவன், ‘ராகு’ எனப்பட்டான். அவனே, பாம்புப் படத்துடன் கூடிய மனிதத்தலை உடையவராக இருக்கிறார். இவரே, ‘கேது’ பகவானாவார். தலை வேறு, உடல் வேறு என்று இரண்டானது. அளவில் சிறிதானது என்றாலும், அமிர்தம் உண்ட காரணத்தால் அவனுக்கும், ‘கிரகப்’ பதவி அளித்தார் பகவான். இவ்விரண்டு கிரகங்களும் விசேஷ சக்தி வாய்ந்தவை. இரண்டு உருவான ஸைம்ஹிதேயனே ராகு, கேது என்று அழைக்கப்பட்டான்.

இவ்வாறு ஆதியில், ‘சப்த கிரகம்’ எனக் கூறப்பட்ட ஏழு கிரகங்களுடன் ராகு, கேது என்ற இரு கிரகங்களும் பகவான் அருளால் சேர்க்கப்பட்டதால், ‘நவக்’ கிரகம் என்றாயிற்று.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com