கூடாரை வெல்லும் கூடாரைவல்லி!

கூடாரை வெல்லும் கூடாரைவல்லி!

வைணவ தலங்களில் ஜனவரி 11 புதன்கிழமை கூடாரைவல்லி திருநாள் சிறப்பாகக் கொண்டாடப் படுகிறது.

கோதை நாச்சியார் ஆண்டாள் அருளிச் செய்த முப்பது பாடல்கள் கொண்ட திருப்பாவை. மார்கழி மாதம் கிருஷ்ணனை  அதிகாலைப் பொழுதில் தோழிகள்  எழுப்பி  பாடி மகிழ்வர்.

இதில்  மார்கழி  27ம் நாள் அல்லது 27 வது பாடல்  "கூடாரை வெல்லும் சீர்க் கோவிந்தா" ஆரம்பிக்கும்.

அக்கார அடிசல்

"மூடநெய் பெய்து முழங்கை வழி வார" என்றபடி, பெருமாளுக்கு நெய் நிறைந்த அக்காரவடிசல் நிவேதனம் செய்து அன்னதானம் செய்வது வைணவர்களின் வழக்கம் .

விரதம் நிறைவு

மார்கழி விரதம் நிறைவு பெற்று, நாங்கள் அணிய கை வளையல்கள், தோள் நகை, காதுத் தோடுகள், செவிப் பூக்கள், கால் சிலம்புகள், புத்தாடை ஆகியவற்றை எங்களுக்கு அருள்வாய். மார்கழி நோன்பினை நிறைவு செய்யும் வகையில், பாலில் வெந்த சோற்றில், அது மூடும் அளவிற்கு நெய்யிட்டு, கூட்டமாக உன்னுடன் அமர்ந்து, கைகளில் நெய் வழிய, பால்சோறு உண்போம். அத்தகைய மகிழ்ச்சியை எங்களுக்கு வழங்கி, எங்களைக் காப்பாயாக என ஆண்டாள் அந்த பாடலில் பாடியிருப்பார்.

மாங்கல்ய பாக்கியம்

ண்டாள் என்ற மானுடப் பெண், மாதவனை மணாளனாகப் பெற்ற மகத்தான நாள் இந்த கூடாரைவல்லி என்பதால், இந்த நாளில் ஆண்டாளை தரிசித்தால் மனம் போல மாங்கல்யம் அமையும் பிரிந்த தம்பதியர் கூடுவார்கள் என்பது ஐதீகம்.

கூடாரைவல்லி என்று சிறப்பித்துக் கூறப்படும் நாள். இந்த நாளில் குறிப்பாக வைஷணவர்கள், சிறப்பாக நெய் வடியும் பாலில் செய்த 'சர்க்கரைப் பொங்கல்' எனும் அக்காரவடிசல் செய்து வழிபடுவர். 

வழிபாடு

ண்டாள்   பிறந்த  ஸ்ரீ வில்லிபுத்தூர், ரங்கமன்னார் எனும் அரங்கனின் ஸ்ரீ ரங்கம்,   காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில்,  உடையவர் அவதரித்த ஸ்ரீ பெரும்புதூர் போன்ற ஊரில் பிறந்த வைணவர்கள், மற்றும்  அல்லாத சிலரும் கூட மரபு வழியாக வழிபட்டு வருகிறார்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com