ஆவுடையார் கோவிலில் மார்கழி திருவாதிரைப் பெருவிழா!

ஆவுடையார் கோவிலில் மார்கழி திருவாதிரைப் பெருவிழா!

திருக்கயிலாய பரம்பரை மெய்கண்ட சந்தானம் திருவாவடுதுறை ஆதினத்திற்குச் சொந்தமான ஆவூடையார்கோவில் என வழங்கப்பெறும் திருப்பெருந்துறை ஸ்ரீயோகாம்பாள் சமதே ஸ்ரீஆத்மநாத சுவாமி திருக்கோயிலில் ஸ்ரீமாணிக்கவாசகப் பெருமான் மார்கழி திருவாதிரைப் பெருவிழா. 

திருப்பெருந்துறை புராணம்-தலச்சிறப்பு- நிலம் எலாம்புகழ் நெடுநகர் பலவுஹம் நினைத்த பலம் எலாம்;தரு நகரமும் சில அவைபரவ வலம் எலாம்;பொலிந்து உயர்ந்தது ஒன்றேஎன வயங்கும் நலம் எலாம்பொலி நாம்புகழ்; பெருந்துறை நகரம்.

விழாச்சிறப்பு- ஆய ஆரோகணம் முன் அலங்கு அவரோகணம் அளவும் மேயஉலா இருபோதும் விளங்குறக் கண்டு, இனிதி ஏத்தி, நாயனார் குருத்து அடியின் நக அருளும் தெரிசனமும் பாய விருப்புறப் பெற்றார் பெறப்படுவது இனி என்னே! 

புண்ணிய பூமியாகிய இந்த பாரத கண்டத்தில் பாண்டிநாடே பழம்பதி சிறப்பித்து பேசப்பெற்ற பாண்டிவள நாட்டில் கருணை வெள்ளப் பெருங்கடல் நிறைந்து உறை பெருந்துறையில திருக்கோயில் கொண்டு எழுந்தருளியிருக்கின்ற ஸ்ரீ சிவயோக நாயகி உடனாய ஸ்ரீ ஆத்மநாத சுவாமி குருந்த மரத்தின் நிழலில் ஞானாசாரிய மூர்த்தமாக எழுந்தருளி வாடிவூரடிகளை ஆட்கொண்டு, அவர் பழதில்லாச்செயல் மணியினை பத்தி செய்து அன்பு முழுவதுமாகிய வடத்தினால் முறையே தொடுத்துச் சாத்தியது கண்டு மாணிக்கவாசகர் என்று அவருக்கு தீக்கைப் பெயர் சூட்டி எமக்குச் செய்த பலவகை உபசாரங்களையும் உமக்கே செய்தவர்கள். இம்மை மறுமை பயன்களையும் வீடுபேற்றையும் பெற்று உய்வார்கள் என்று அவருக்கு அருள் செய்தருளியதும், அவ்வாறே ஸ்ரீமாணிக்கவாசகப் பெருமானுக்கு இந்தத் தலத்தில் எல்லாச் சிறப்புகளும் பண்டைக்காலத்தில் தொடங்கி நடைபெற்று வருவதும் யாவருக்கும் தெரிந்தனவே. 

அதன்படி ஸ்ரீஆத்மநாதசுவாமி திருக்கோயிலில் திருவாவடுதுறை ஆதினம் 24ஆவது குருமகா சந்நிதானமாக ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாசாரிய சுவாமிகள் அருளாணையின் வண்ணம் ஸ்ரீமாணிக்கவாசகப் பெருமானுக்கு மார்கழி திருவாதிரைப் பெருவிழாவில் (1-1-2023) வெள்ளியானை வாகனத்தில் யானை படைத்தளபதி காட்சி (2-1-2023) உருத்திராட்டி மணி விமானத்தில் பிட்டுக்கு நேர்பட மண்சுமந்த பேரருள் காட்சி, 108 சங்காபிஷேகம், குருத்தோலை சப்பரத்தில் வெள்ளி இடபவாகனத்தில் சிவபெருமான்; அலங்காரம். வெள்ளி மயில் வாகனத்தில் கார்த்திகை ஸ்ரீசுப்பிரமணிய சுவாமி வீதியுலா 3-1-2023 வெள்ளிப் படிச்சட்ட வாகனத்தில் எல்லாம் வல்ல சித்தர் பெருமான் காட்சி. வெள்ளிக்குதிரை வாகனத்தில் மதுரை பெருநன் மாநகர் தன்னில் குதிரை சேவகன் காட்சி. 4-1-2023 திருத்தேர், வெள்ளி சந்திர பிரஜை வாகனத்தில் நடராஜர் அலங்காரம் 5-12023 வெள்ளிரதம், 6-1-2023 அதிகாலை உபதேசக் காட்சியுடடன் நிறைவு பெறுகிறது.  

வழித்தடம் - புதுக்கோட்டையிலிருந்து தென்கிழக்கே 49.கீ.மீ, தொலைவில் ஆவுடையார் கோவில் ஊர் உள்ளது. இறங்கியவுடன் கோயில் அமைந்துள்ளது. 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com