மதுரையில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்!

மதுரையில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்!

உலகப் புகழ் பெற்ற மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் இன்று நடைபெறுகிறது

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. சித்திரை திருவிழா மதுரையில் களைகட்டியுள்ளது. ஒரு லட்சத்திற்கும் அதிகமான பக்தர்களுக்கு திருமண விருந்து அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பட்டத்தரசி மதுரை மீனாட்சிக்கு சுந்தரேஸ்வரர் உடன் இன்று திருக்கல்யாணம் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. அதிகாலை முதலே மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணத்தை காண மக்கள் கூட்டம் அலை மோதுகிறது. மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணத்தை காண முருகனும் தெய்வானையும் திருப்பரங்குன்றத்தில் இருந்து வந்திருக்க கூடவே பவளக்கனிவாய் பெருமாளும் தாரை வார்த்துக்கொடுக்க வந்திருக்கிறார்.

இன்று அதிகாலை மீனாட்சி அம்மன் கோயிலில் எழுந்தருள்வர். மீனாட்சி சுந்தரேஸ்வர், பிரியாவிடை, சித்திரை வீதிகளில் பட்டின பிரவேசம் முடிந்து, கோயிலுக்குள் ஊஞ்சல் மண்டபத்தில் சந்திப்பு நடைபெறும் .

சிவபெருமான் மீனாட்சியை போரில் வென்று மணம் புரிந்த திருவிளையாடல் புராண நிகழ்வே மீனாட்சி திருக்கல்யாண விழாவாக கொண்டாடப்படுகிறது. மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் அதிகாலை முதலே மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணத்தை காண ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டுள்ளனர். கோவில் நிர்வாகம் விழாவிற்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்து உள்ளது. மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் பாதுகாப்பு ஏற்பாடுகளும் பலப் படுத்த பட்டுள்ளன.

இன்று மே 2ல் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் கோலாகலமாக நடந்தது. நாளை மே 3 தேரோட்டம், மே 4 கள்ளழகர் எதிர்சேவை,மே 5ல் வைகையாற்றில் அழகர் இறங்கும் நிகழ்ச்சி நடக்கிறது. கோவிலின் வடக்காடி வீதி திருக்கல்யாணமண்டபத்தில் காலை 8:30 முதல் 8:59 மணிக்குள் திருக்கல்யாணம் நடக்கிறது. மே 3 தேரோட்டம அன்று அதிகாலை 5:05 மணி முதல் 5:45 மணிக்குள் அம்மனும், சுவாமியும் எழுந்தருள தேர்கள் புறப்படுகின்றன.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com