தீர்த்தபாலீஸ்வரர் கோயில் - சந்திரன் ஸ்தலம்!

தீர்த்தபாலீஸ்வரர் கோயில் - சந்திரன் ஸ்தலம்!

மாசி மாத தீர்த்த நீராட்ட விழாவின் போது கடலுக்குள் ஏழு சிவாலயங்களிலிருந்து எழுந்தருளும் சுவாமிகளில், தீர்த்த பாலீஸ்வரருக்குத்தான் முதல் தீர்த்த வைபவம் நடைபெறுவதால், இந்த ஈஸ்வரருக்கு தீர்த்த பாலீஸ்வரர் என்ற திருநாமம் ஏற்பட்டது.

அத்ரி முனிவரும் அகஸ்திய முனிவரும் வழிபட்ட திருத்தலம் ஸ்ரீ தீர்த்தபாலீஸ்வரர் கோயில். சப்த சிவாலயங்களில் இந்தக் கோயில் இரண்டாவதாக வழிபட வேண்டிய கோயிலாகும். பண்டைக் காலத்தில் இங்கு 64 வகையான தீர்த்தக்குளங்கள் அடுத்தடுத்து இருந்ததாகவும் கூறப்படுகின்றது. இந்தத் தீர்த்தங்கள் தெய்வீக சக்தி வாய்ந்தவையாகக் கருதப்பட்டு வந்தன. மாசி மாதத்தில் 7 சிவாலயங்களின் உற்சவர்களும் கடலில் தீர்த்தவாரி காண்பதற்கு முன்பாக இந்தக் கோயிலில் இருந்த தீர்த்தக் குளங்களில்தான் தீர்த்தவாரி நடைபெறும். இத்தலம் நீருக்கு அதிபதியான சந்திர ஸ்தலமாக விளங்குகிறது. இந்த கோயில் இறைவனை திங்கள் கிழமைகளில் வணங்கி வரத் தண்ணீர் பஞ்சமே ஏற்படாது.

இங்கு கோவிலுக்கு சற்று தொலைவில் கடல் இருப்பதாலும் தீர்த்தங்களை பரிபாலனம் செய்யும் ஈஸ்வரர் தீர்த்த பாலீஸ்வரர் என்றும் அக்காலத்தில் ஒரு சமயம் அகத்திய முனிவருக்கு கடும் நோய் எற்பட்டது. தன் நோய் நீங்கிட இறைவனை அருள்பாலிக்குமாறு இறைஞ்சினார்.

இறைவனும் கருணைக் கொண்டு அகத்திய முனிவர் நோய் நீங்கிட அருள்பாலித்தரர். தீர்த்தத்தைக் கொடுத்து நோயை நீக்கியதால் இங்கு உறையும் ஈஸ்வரர் தீர்த்த பாலீஸ்வரர் என அழைக்கப்படுகிறார். மாசி மகத்தீர்த்த வாரித் திருவிழாவின் போது, சமுத்திர தீர்த்தத்தில் இவ்வாலய இறைவன் முதன்மையாக தீர்த்தம் பாலித்த பின்னரே ஏனைய சிவாலயங்கள் தீர்த்தம் பாலிப்பது வழக்கமாக இருப்பதாலும் கூட இப்பெயர் பெற்றுள்ளதாக கூறலாம்.

மயிலையிலிருந்து திருவல்லிக்கேணி செல்லும் வழியில் நடேசன் சாலையில் தீர்த்த பாலீஸ்வரர் ஆலயம் உள்ளது. மாசிமாதம் மகா சிவராத்திரி தினத்தன்று மட்டும் சூரியன் தனது ஒளியை சுவாமியின் மீது பரப்பி பூஜை செய்வது சிறப்பு.

திறக்கும் நேரம்:

காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com