திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசி சிறப்பு தரிசன டிக்கெட்கள் அறிமுகம்!

perumal
perumal

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசி தினம் அன்று பெருமாளை தரிசிக்க 10000 ரூபாய் டிக்கெட்டுகள் வழங்கப் பட உள்ளது. இந்த டிக்கெட்டுகள் ஆன்லைன் மூலம் மட்டுமே வழங்கப்படவுள்ளது. இது வைகுண்ட ஏகாதசி தினத்தில் பக்தர்கள் பெருமாளை தரிசிக்க வசதியாக மொத்தம் 20000 டிக்கெட்கள் விற்பனைக்கு வர உள்ளதாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

tirupathy
tirupathy

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசி தினம் அன்று ஜனவரி 2ஆம் தேதி தொடங்கி 12ஆம் தேதி வரை சொர்க்கவாசல் 10 நாட்கள் திறந்திருக்கும். வைகுண்ட ஏகாதசி தினம் அன்று சுப்ரபாத சேவை முடிந்த பின் கோவிலின் சொர்க்கவாசல் திறக்கப்படும் என்று திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. ஜீயர்கள், தேவஸ்தான அறங்காவலர் குழுவினர், நீதிபதிகள், மத்திய மாநில அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் ஆகியோர் சாமி கும்பிட அனுமதி அளிக்கப்படும். அதனை தொடர்ந்து சாதாரண பக்தர்கள் வரிசையில் வைகுண்ட வாசல் வழியாக சென்று ஏழுமலையானை தரிசனம் செய்யலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதனிடையே வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வதற்கு வசதியாக பல்வேறு ஏற்பாடுகளை திருமலை திருப்பதி தேவஸ்தானம் செய்து வருகிறது. இதில் முக்கியமானதாக ஜனவரி 2 ம் தேதி துவங்கி, ஜனவரி 11 ம் தேதி வரை தொடர்ந்து 10 நாட்கள் சொர்க்க வாசல் வழியாக சென்று பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட உள்ளதாக திருப்பதி கோவில் நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

triupathy
triupathy

சர்வ தரிசனம் எனப்படும் இலவச தரிசனத்திற்காக மட்டும் 5 லட்சம் தரிசன டோக்கன்கள் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஒரு நாளைக்கு 50,000 டோக்கன்கள் என்ற அடிப்படையில் பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர். இதே போல் 2.5 லட்சத்திற்கும் அதிகமான ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட்களும் ஒதுக்கப்பட உள்ளது. சிறப்பு தரிசனத்திற்கு ஒரு நாளைக்கு 25,000 டோக்கன்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

சர்வ தரிசனத்திற்கான டோக்கன்கள் திருப்பதியில் மட்டுமே பெற முடியும். இதனால் கூட்டத்தை முறையாக கட்டுப்படுத்த முடியும் என்பதுடன், தேவையற்ற கூட்ட நெரிசலையும் தவிர்க்கலாம் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. வைகுண்ட ஏகாதசி சமயத்தில் திருப்பதிக்கு பக்தர்கள் வர எந்த கட்டுப்பாடுகளும் கிடையாது. அதே சமயம் தரிசன டோக்கன்கள் ஒதுக்கப்பட்ட பக்தர்கள் மட்டுமே தரிசனத்திற்காக அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com