நமஸ்காரம்
நமஸ்காரம்

நமஸ்காரம் பண்ணிக்கோ!

விசேஷ நாட்களிலோ, மரியாதை நிமித்தமாகவோ தன்னை விட வயதில் மூத்தவர்களின் பாதங்களில் அல்லது கோயில்களுக்குச் செல்லும்போது சுவாமியை வணங்குவதற்காக தரையில் விழுந்து வணங்குவதை நமஸ்காரம் செய்வது என்று கூறுவது வழக்கம். பொதுவாக, இரண்டு கால்களையும் நீட்டி, தரையில் விழுந்து வணங்குவது நமஸ்காரம் எனப்படும். இந்த நமஸ்காரத்தில் இரண்டு வகை, அதாவது ஆண்களுக்கு ஒரு விதம், பெண்களுக்கு ஒரு விதம் என இரு வகை நமஸ்காரம் இருப்பதை நீங்கள் அறிவீர்களா? ஒன்று சாஷ்டாங்க நமஸ்காரம் மற்றது பஞ்சாங்க நமஸ்காரம்.

ண்கள் தரையில் விழுந்து வணங்குவதை, ‘சாஷ்டாங்க நமஸ்காரம்’ என்றும், பெண்கள் தரையில் விழுந்து வணங்குவதை, ‘பஞ்சாங்க நமஸ்காரம்’ என்றும் கூறுவர். சாஷ்டாங்க, பஞ்சாங்க என்பதை ஏதோ ஒரு பிரிவினர் மட்டுமே பேசும் பேச்சு மொழியாக நினைக்க வேண்டாம். சாஷ்டாங்க என்பதற்கு உடலின் எட்டு அங்கங்கள் என்றும், பஞ்சாங்க என்பதற்கு உடலின் ஐந்து அங்கங்கள் என்றும் அர்த்தமாகும்.

சாஷ்டாங்க நமஸ்காரத்தை ஆண்கள் மட்டுமே செய்ய வேண்டும். உடலின் அங்கங்களான கைகள், கால்கள், முழங்கால்கள், வயிறு, மார்பு, தலை என ஆறு அங்கங்களும் மற்றும் ஏழாவதாக வாக்கினால் ‘நம’ என்று சொல்லியும், எட்டாவதாக மனதில் ஒருமைப்பாட்டுடனும் செய்யப்படும் நமஸ்காரத்துக்கு, ‘சாஷ்டாங்க நமஸ்காரம்’ என்று பெயர். ஆண்கள் செய்யும் இந்த நமஸ்காரத்தினால் செய்யும் அனைத்துச் செயல்களிலும் வெற்றி மற்றும் மன உறுதியைப் பெறலாம்.

தேபோல, பஞ்சாங்க நமஸ்காரத்தை பெண்கள் மட்டுமே செய்ய வேண்டும். பெண்களின் உடல் அங்கங்களான முழங்கால்கள், கைகள், உச்சந்தலை ஆகிய மூன்று அங்கங்களும் மற்றும் நான்காவதாக வாக்கினால் வணக்கத்தைச் சொல்லிக்கொண்டும், ஐந்தாவதாக மன ஒருமைப்பாட்டுடனும் செய்யப்படும் நமஸ்காரத்துக்கு, ‘பஞ்சாங்க நமஸ்காரம்’ என்று பெயர். இந்து மத சாஸ்திரப்படி, பெண்களின் வயிறு மற்றும் மார்பகங்கள் தரையில் படக் கூடாது. பெண்களின் வயிறானது ஒரு உயிரைத் தாங்கும் உன்னத வேலையைச் செய்கின்றது. அவர்களின் மார்பகமானது குழந்தைக்குப் பாலூட்டும் உயரிய வேலையைப் புரிகின்றது. எனவே, அவை இரண்டும் தரையில் படக்கூடாது. அதனாலேயே பெண்கள் இந்த வகை நமஸ்காரத்தைச் செய்யக்கூடாது என்கின்றன சாஸ்திரங்கள். இப்படி நமஸ்காரம் செய்வது பெண்களுக்கு நீண்ட ஆயுளையும் அனைத்துவித நன்மைகளையும் பெற்றுத் தரும்.

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com