பலன் தரும் வழிபாடுகள் பன்னிரண்டு!

கணபதிக்கு அருகு மாலை
கணபதிக்கு அருகு மாலை
Published on

1.ஒரு நாள் முழுவதும் விநாயகருக்கு சாற்றிய அருகம் புல் மாலையை மறுநாள் கோயிலுக்கு இயன்ற காணிக்கையை உண்டியலில் செலுத்திய பின்பு கோயில் அர்ச்சகரிடம் சொல்லி திரும்பப் பெற்று அதை உதிர்த்து நன்றாக காய வைக்கவும். இப்படி காய்ந்த அருகம்புல்லை பௌர்ணமி, அமாவசை மற்றும் வியாழக்கிழமைகளில் சாம்பிராணியுடன் சேர்த்து தூபம் போட, வீட்டில் தீய சக்திகள் இருந்தால் விலகி ஓடும். இதை வியாபார இடங்களிலும் செய்யலாம்.

2.மஹாவிஷ்ணு கோயிலில் தினமும் அதிகாலையில் விஷ்ணு சஹஸ்ரநாமம் மற்றும் லஷ்மி சஹஸ்ரநாமம் பாராயணம் செய்தால் நீங்கள் நினைப்பது நிறைவேறும். கண்டிப்பாக உங்கள் கோரிக்கைகள் நிறைவேறும்.

3.தொட்டால் சிணுங்கி, முடக்கத்தான், துளசி, வில்வம், கத்தாழை போன்ற செடிகளை வீட்டில் வளர்த்தால் கண் படுதல், ஏவல், சூன்யம் போன்ற தீய சக்திகள் எளிதில் வீட்டிற்குள் வராது.

மயிலிறகு
மயிலிறகு

4.மயில் தோகையினை சில எண்ணிக்கை மட்டும் வீட்டில் வைத்து இருப்பது முருகனின் ஆசிகள் கிடைக்கச் செய்வதுடன் பணத் தட்டுப்பாடு வரவிடாமல் செய்யும். குறிப்பாக, இரு கண் உள்ள மயில் தோகையினை வைத்திருப்பது மிகச்சிறப்பு.

5.வீட்டில் விக்ரஹங்கள் வைத்து வழிபாடு செய்பவர்கள் கறவை பசும் பால், தேங்காய் நீர், அரைத்த சந்தானம் கொண்டு அவற்றுக்கு அபிஷேகம் செய்ய வேண்டும். மனிதர்களின் கை, கால்கள் படாத நீரில் அல்லது பழச்சாறு கொண்டும் அபிஷேகம் செய்யலாம்.

6.வீட்டில் உள்ள விக்ரஹங்களுக்கு சக்தியூட்ட நாட்டு மருந்து கடையில் கிடைக்கும் தேன் மெழுகை சிறிது வாங்கி விக்ரஹங்களின் அடியில் ஒட்டிவைத்தால் அந்த விக்ரஹங்களுக்கு சக்தி வந்துவிடும்.

7.வெள்ளை மிளகு, கடுகு, காய்ந்த வில்வ இலைகள், நாய் கடுகு (மிளகு), பால் சாம்பிராணி, கடுக்காய், காய்ந்த வேப்ப இலைகள், ஓமம், தான்றிக்காய், காய்ந்த மருதாணி இலை, மஞ்சள் இவற்றை நன்றாகக் கலந்து அமாவாசை, பௌர்ணமி, வெள்ளிக்கிழமை போன்ற நாட்களில் தூபம் போடுவது சகல நன்மைகளைத் தரும். குலசாமிகளின் ஆசிகள் கிடைக்கச் செய்யும். (இவை அனைத்தும் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்.)

பால் அபிஷேகம்
பால் அபிஷேகம்

8.கோயில்களில் அபிஷேகத்திற்கு கறவை பசும் பால் மட்டும் வழங்க வேண்டும் (பதப்படுத்தப்பட்ட பாக்கெட் பால் வேண்டாம்) அல்லது இளநீரை தரலாம். இது உங்கள் சந்ததியர் அனைவரின் பாபத்தையும், சாபத்தையும் போக்கும் வல்லமை உடையது.

9.எந்த ஒரு நல்ல காரியம் துவங்க வீட்டிலிருந்த வெளியில் செல்லும்பொழுது வீடு அருகில் உள்ள விநாயகருக்கு ஒரு தேங்காய் உடைப்பதும், பசுவிற்கு வாழைப்பழம் தருவதும் துவங்கும் காரியம் நல்ல முறையில் வெற்றியடையச் செய்யும்.

10.கொப்பரை தேங்காயை துண்டுகளாக்கி நன்கு காய வைத்து பொடித்து சாம்பிராணியுடன் சேர்த்து அதை பெருமாளுக்கும், கருப்பசாமிக்கும் தூபமாகக் காண்பித்தால் பெருமாளும் கருப்பசாமியும் நம் குலத்தைக் காப்பர்.

11.பசு நெய்யை செப்புப் பத்திரத்தில் நிறைத்து கோயிலுக்கு தர்மம் செய்தால் வம்ச சாபம் விலக வழிகளைத் தெரியப்படுத்தும்.

12. ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் பெருமாள் கோயில்களில் உள்ள தாயாருக்கு தொடர்ந்து குங்கும அர்ச்சனை செய்து வந்தால் செல்வ வளம் பெருகும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com