தினபலன்
கும்பம் - 05-02-2023
இன்று திட்டமிட்டபடி செயலாற்றி காரிய அனுகூலம் பெறுவீர்கள் . சில காரியங்கள் எதிர்மறையாக நடக்கும். பொதுவில் நீங்கள் இதுவரை எதிர்பார்த்த காரியங்கள் எல்லாம் இழுபறியாக நிறைவேறாமல் இருந்தாலும், ஏதோவொரு வகையில் எப்படியும் நடந்துவிடும் என்று நம்பிக்கை இருக்கும். குடும்பத்தில் சிறு சண்டைகள் உண்டாகலாம்.
அவிட்டம் 3, 4 பாதங்கள்: பணம் வந்து சேரும்.
சதயம் 4ம் பாதம்: நீண்ட நாட்களாக வாங்க திட்டமிட்ட வாகனம் சொத்து மற்றும் வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள்
பூரட்டாதி 1, 2, 3 பாதங்கள்: குடும்பத்தில் இறுக்கமான சூழ்நிலை காணப்படும்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை
அதிர்ஷ்ட எண்கள்: 5, 6