தினபலன்
கும்பம் - 06-02-2023
இன்று பிள்ளைகளுக்காக செய்யும் பணிகள் திருப்தி தரும். அக்கம் பக்கத்தில் இருப்பவர்களுடன் இருந்த தகராறுகள் நீங்கும். நீங்கள் செய்யும் காரியங்களுக்கு எல்லா தரப்பினரிடம் இருந்தும் ஆதரவு கிடைக்கும். நன்மை தீமைகளை பற்றி கவலைப்படாமல் செயலாற்றுவீர்கள். வெளிநாடு தொடர்பான பிரச்சனைகள் நீங்கும். திறமை வெளிப்படும். உறவினர்களிடம் இருந்த கருத்து வேற்றுமை நீங்கும்.
அவிட்டம் 3, 4 பாதங்கள்: தொழில் வியாபாரம் சீராக நடக்கும்.
சதயம் 4ம் பாதம்: பழைய பாக்கிகள் வசூல் செய்வதில் வேகம் இருக்கும்.
பூரட்டாதி 1, 2, 3 பாதங்கள்: புதிய ஆர்டர்கள் கிடைப்பதில் ஏற்பட்ட சிக்கல்கள் தீரும்.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை, வெளிர் சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3