தினபலன்
கும்பம் - 08-05-2023
இன்று தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் வீண் அலைச்சல், பண வரத்தில் தாமதம் போன்றவற்றை சந்திக்க வேண்டி இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கூடுதல் பணிசுமை இருக்கும். அலுவலகம் தொடர்பான காரியங்களுக்காக அலைய வேண்டிவரும். எந்திரங்களை கையாளும் போது கவனம் தேவை.
அவிட்டம் 3, 4 பாதங்கள்: குடும்பத்தில் அமைதி நிலவ குடும்ப உறுப்பினர்களை அனுசரித்து செல்வது நல்லது.
சதயம் 4ம் பாதம்: கணவன் மனைவிக்கிடையே மன வருத்தம் உண்டாகலாம்.
பூரட்டாதி 1, 2, 3 பாதங்கள்: பிள்ளைகள் நலனில் அக்கறை காட்டுவது நல்லது.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9