கும்பம் - 11-03-2023
இன்று இனிமையான பேச்சின் மூலம் எதிலும் வெற்றி காண்பீர்கள். வீண் குற்றச்சாட்டிற்கு ஆளாக நேரிடலாம். கவனமாக இருப்பது நல்லது. மற்றவர்களின் செய்கையால் கோபம் ஏற்படலாம். நிதானம் தேவை. பூர்வீக சொத்துக்களில் இருந்த பிரச்சனைகள் குறையும். அதன் மூலம் வருமானம் கிடைக்கும். பிள்ளைகள் ஒற்றுமையுடன் இருப்பார்கள். புத்திசாதூர்யம் அதிகரிக்கும். வெளியூரில் இருந்து வரும் தகவல்கள் நல்ல தகவல்களாக இருக்கும். கணவன்-மனைவிக்கிடையே எதையும் மனம் விட்டு பேசி அதன் பிறகு செய்வது நன்மை தரும். குடும்பத்தில் அமைதி உண்டாக கோபத்தை குறைப்பது நல்லது.
அவிட்டம் 3, 4 பாதங்கள்:இன்று குடும்பத்தில் இருந்த குழப்பம் நீங்கி அமைதி உண்டாகும். கணவன் மனைவிக்கிடையே மகிழ்ச்சி காணப்படும். பிள்ளைகள் நலனில் கூடுதல் கவனம் செலுத்துவீர்கள். வாகனங்கள் சொத்துக்கள் வாங்க ஆர்வம் காட்டுவீர்கள்.
சதயம் 4ம் பாதம்:இன்று மற்றவர்களால் இருந்து வந்த பிரச்சனைகள் குறையும். குடும்பத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். பணவரத்து திருப்திதரும். வியாபாரத்தில் இருந்த போட்டிகள் நீங்கும். கிளைகளை விரிவுபடுத்த முழுகவனம் செலுத்துவீர்கள். மன அமைதி கிடைக்கும். காரிய அனுகூலம் உண்டாகும். பூரட்டாதி 1, 2, 3 பாதங்கள்:இன்று எதை பற்றியாவது சிந்தித்துக் கொண்டே இருக்கும் மனநிலை இருக்கும். உங்கள் மீது மற்றவர்கள் கோபப்படமுடியாத அளவு நடந்து கொள்வீர்கள். மனக்கவலை குறையும். சந்திரன் சஞ்சாரத்தால் பணவரவு இருக்கும். பயணங்கள் செல்ல வேண்டி இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள்
அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 7