கும்பம் - 13-03-2023
இன்று ரகசியங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதால் பல காரிய தடைகளை சந்திக்க வேண்டி இருக்கும். வீண் வாக்குவாதங்கள், அதன்மூலம் பிறரிடத்தில் பகை போன்றவை உண்டாகலாம். தந்தை மூலம் செலவு உண்டாகலாம். வெளியூர் பயணம் செல்ல நேரிடலாம். நோய் நீங்கி உடல் ஆரோக்கியம் உண்டாகும். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.
அவிட்டம் 3, 4 பாதங்கள்:இன்று தாய்மாமனிடம் கருத்து மோதல்கள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் இருப்பதால் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் அதிகமான உழைப்பினை கொடுக்க வேண்டி வரலாம். வேலையில் கவனமுடன் செல்வது நல்லது. சதயம் 4ம் பாதம்:இன்று எல்லா நன்மைகளையும் தடையின்றி அடைவீர்கள். மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் காண்பார்கள். இதுவரை தொந்தரவு கொடுத்துவந்த நோய் விலகும். அதனால் ஏற்பட்ட மனபாரம் குறையும். வரக்கூடிய உபரி வருவாயால் கடன் அடைபடும். தொழிலதிபர்கள் எதிர்பார்த்தபடி வரவுகள் வந்துசேரும். பூரட்டாதி 1, 2, 3 பாதங்கள்:இன்று புதிய ஒப்பந்தங்கள் கைகொடுக்கும். தொழிலதிபர்கள் பங்குதாரர்களிடம் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். கணவன்- மனைவி ஒற்றுமை சுமுகமாக இருக்கும். மனைவி வழியில் வரவேண்டிய சொத்துகள் கிடைக்கும். வியாபாரிகள் எந்தக் கொள்முதலையும் தயக்கமின்றிச் செய்யலாம். வியாபாரம் பெருகும். போட்டியாளர்கள் விலகிச்செல்வார்கள்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9