கும்பம் - 15-03-2023
இன்று புதிய ஆர்டர் தொடர்பான காரியங்கள் சாதகமான பலன் தரும். வியாபார போட்டிகள் குறையும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பணிசுமை குறைந்து மனநிம்மதி அடைவார்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். உறவினர்கள் வருகை இருக்கும். திருமணம் போன்ற சுப காரியம்
நடக்கும். நிலம், வீடு மூலம் லாபம் கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும்.
அவிட்டம் 3, 4 பாதங்கள்:இன்று கணவன் மனைவிக்கிடையே இருந்த மனவருத்தம் நீங்கும். பிள்ளைகளுடன் மகிழ்ச்சியாக பொழுதை கழிப்பீர்கள். உறவினர்களுடன் இருந்த மன வருத்தம் நீங்கும். மற்றவர்களுடன் இருந்த மனவருத்தம் நீங்கி நட்பு உண்டாகும். எந்த ஒரு வேலையிலும் வேகத்தை காண்பீர்கள். செலவு குறையும். சதயம் 4ம் பாதம்:இன்று மாணவர்கள் கல்வி தொடர்பான பயணம் செல்ல நேரலாம். திறமை வெளிப்படும். சாமர்த்தியமான பேச்சு இருக்கும். எதிலும் வெற்றி கிடைக்கும். பெரியோர்களின் ஆதரவு கிடைக்கும். எதிர்பார்த்த பண வரவு கிடைக்கும். மற்றவர்களுக்கு உதவி செய்வதன் மூலம் சமூகத்தில் அந்தஸ்தும் மரியாதையும் கிடைக்க பெறுவீர்கள். பூரட்டாதி 1, 2, 3 பாதங்கள்:இன்று தொழில் வியாபாரம் லாபகரமாக நடக்கும். தொழில் விரிவுபடுத்துவது பற்றிய ஆலோசனை மேற்கொள்வீர்கள். அனுபவப்பூர்வமான அறிவு திறன் கைகொடுக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களின் செயல்திறமை அதிகரிக்கும். பங்கு மார்க்கெட்டில் முன்னேற்றம் காணப்படும். எடுத்த காரியம் நல்லபடியாக நடந்து முடியும். பதவி உயர்வு கிடைக்கலாம்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 3, 5