தினபலன்
கும்பம் - 26-01-2023
இன்று குடும்பத்தில் இருப்பவர்களின் ஒத்துழைப்பால் வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். கணவன், மனைவிக்கிடையில் இருந்த மனவருத்தம் நீங்கும். பிள்ளைகளிடம் அன்பாக நடந்து கொள்வீர்கள். அடுத்தவருக்கு உதவி செய்யும் போது கவனம் தேவை. வீண் மன சங்கடம் ஏற்படலாம். பணவரத்து திருப்தி தரும்.
அவிட்டம் 3, 4 பாதங்கள்: விற்பனைத் தொழில் செய்வோருக்கு லாபம் அதிகரிக்கும்.
சதயம் 4ம் பாதம்: தங்கள் தொழிலை விரிவுபடுத்திக் கொள்ள சரியான நாள்.
பூரட்டாதி 1, 2, 3 பாதங்கள்: உத்தியோகஸ்தர்கள் புதிய உக்திகளைக் கையாண்டு தொழிலில் முன்னேறுவீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை, நீலம்
அதிர்ஷ்ட எண்: 5, 7