தினபலன்
கும்பம் - 26-04-2023
இன்று மற்றவர்களின் நலனுக்காக வாதாடி வெற்றி பெறுவீர்கள். கவுரவம், அந்தஸ்து உயரும். தொழில் வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். பழைய பாக்கிகள் வசூலாகும். ஆர்டர்கள் வருவது திருப்திகரமாக இருக்கும். பிள்ளைகளுடன் சந்தோஷமாக பொழுதை கழிப்பீர்கள். மாணவர்கள் கல்வியில் வெற்றி பெற முழுமூச்சாக பாடுபடுவீர்கள்.
அவிட்டம் 3, 4 பாதங்கள்: பயணத்தின் மூலம் லாபம் உண்டாகும்.
சதயம் 4ம் பாதம்: நண்பர்களால் உதவிகள் கிடைக்கும்.
பூரட்டாதி 1, 2, 3 பாதங்கள்: பணவரத்து எதிர்பார்த்தபடி இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 1, 2, 7