தினபலன்
மேஷம் - 03-02-2023
இன்று மிகவும் சிறப்பான பலன்களைப் பெறுவீர்கள். பொருளாதார வளமும் பெண்களால் அனுகூலமும் கிடைக்கும். இருந்தாலும் அவ்வப்போது பொருள் இழப்பும், சிறுசிறு உடல் உபாதைகளும் ஏற்படலாம். இவ்வளவு நாட்களாக இருந்து வந்த பிள்ளைகளால் பிரச்சனை நீங்கும். பிள்ளைகள் பற்றிய கவலை உண்டாகும். சகோதரர்கள், தகப்பனாரிடம் வீண் வாக்குவாதங்கள் ஏற்படலாம்.
அசுபதி: களைப்பு பித்தநோய் உண்டாகலாம்.
பரணி: வீண்கவலை இருக்கும்.
கிருத்திகை 1ம் பாதம்:மற்றவர்கள் விவகாரங்களில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது.
அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு, நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9