தினபலன்
மேஷம் - 06-02-2023
இன்று கவுரவம் அந்தஸ்து உயரும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வீண் அலைச்சலை தவிர்ப்பது நல்லது. குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். மன தைரியம் உண்டாகும். எடுத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். உங்களது நற்செயல்கள் மூலம் சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் உயரும். பணவரத்து குறைவின்றி இருக்கும். தேவையற்ற இடமாற்றம் ஏற்படலாம்.
அசுபதி: எதையும் திட்டமிட்டு செய்வது நன்மை தரும்.
பரணி: உத்தியோகத்தில் இருப்பவர்கள் வேலைபளு குறைந்து மன மகிழ்ச்சியடைவார்கள்.
கிருத்திகை 1ம் பாதம்: மேல் அதிகாரிகளின் உதவியும் ஆலோசனையும் கிடைக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, வெளிர் நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 5, 9