
இன்று முயற்சிகளின் பேரில் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். ஆனால் பொருளாதார ரீதியாக சிறப்பாக இருக்கும். எதிர்பார்த்த புகழ், பாராட்டு கிடைக்கும். அரசியலில் உள்ளவர்கள் வாகனங்கள் பயன்படுத்தும் போது கவனம் தேவை. சிலருக்கு இடமாற்றம் உண்டாகலாம். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். வாழ்க்கை தரம் உயரும். மாணவர்களுக்கு எதிர்காலத்தை பற்றிய எண்ணம் உண்டாகும். மேல் படிப்பு பற்றிய சிந்தனையில் ஈடுபடுவீர்கள். சக மாணவர்களின் விவகாரங்களில் தலையிடாமல் ஒதுங்கி இருப்பது நல்லது.
அசுபதி:இன்று பயணம் செல்ல நேரிடலாம். சந்திரன் சஞ்சாரம் நன்மை தரும். காரிய அனுகூலம் உண்டாகும். மற்றவர்களுக்கு உதவ முன்வருவீர்கள். சுக்கிரன் வாழ்க்கை துணை மூலம் லாபம் கிடைக்க செய்வார். மனதில் இருந்த சஞ்சலம் நீங்கி மகிழ்ச்சியும் நிம்மதியும் கிடைக்க பெறுவீர்கள்.
பரணி:இன்று உங்கள் மீது குற்றம் சொல்ல நினைப் பவர்கள் அதனை விட்டுவிடுவார்கள். தொழில் வியாபாரத்தில் சுமாரான முன்னேற்றம் காணப்படும். எதிர்பார்த்த கடன்வசதி கிடைப்பதில் சாதகமான பலன் இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சற்று கவனமாக பணிகளை கவனிப்பது நல்லது. கிருத்திகை 1ம் பாதம்:இன்று குடும்பத்தில் நிம்மதியும் சுகமும் உண்டாகும். மனவருத்ததில் விட்டு சென்ற உறவினர்கள் மீண்டும் வந்து சேருவார்கள். கணவன் மனைவிக் கிடையில் சுமுகமான உறவு இருக்கும். பிள்ளைகள் கல்வியில் மேன்மை அடைய தீவிரமாக செயல்படுவீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம்
அதிர்ஷ்ட எண்: 4, 6