தினபலன்
மேஷம் - 12-04-2023
இன்று குடும்பத்தில் இருப்பவர்களின் செயல்கள் டென்ஷனை உண்டாக்கும். கணவன், மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை ஏற்பட்டு நீங்கும். பிள்ளைகள் விஷயத்தில் கவனம் தேவை. தாய், தந்தையின் உடல்நிலையில் எச்சரிக்கை அவசியம். நெடுநாளாக வராமல் இருந்த பணம் வரும். பொதுநல சேவகர்கள், அரசியல்வாதிகள் நினைத்ததை நிறைவேற்றிக் கொள்ள வாய்ப்புகள் உண்டு.
அசுபதி: புதிய தொழில் தொடங்குவத்ற்குண்டான ஆர்வம் பிறக்கும்.
பரணி: குறைந்த முதலீட்டில் தொழில் தொடங்கலாம்.
கிருத்திகை 1ம் பாதம்: தொழில் நிமித்தமாக வெளியூர் அல்லது நீண்ட தூரம் பயணம் மேற்கொள்ள வேண்டி வரும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை
அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9