
இன்று பல பிரச்னைகள் ஒரே நேரத்தில் சிரமம் தந்தாலும் ஏற்றுக் கொண்டு முயற்சியினால் வெற்றிகளை ஈட்டுவீர்கள். ரியல் எஸ்டேட் துறையினர் முன்னேற்றம் காண்பர். உடல்நலத்தில் கவனம் தேவை. குடும்பத்தில் உள்ளவர்களுடன் ஒத்துப்போக வேண்டும். சகோதர சகோதரிகளுடன் உறவு சிறக்கும். உடன்பிறந்தவர்களுக்கு உயர் பதவி கிடைக்கும்.
அசுபதி: புதிய முயற்சிகளை தள்ளிபோடுவது நல்லது.
பரணி: மற்றவர்களுடன் பகை ஏற்படலாம்.
கிருத்திகை 1ம் பாதம்: நெருக்கடியான நேரத்தில் உறவினர்கள் நண்பர்கள் உங்களை விட்டு விலகி செல்லலாம்.
அதிர்ஷ்ட நிறம்: வெளிர் மஞ்சள்
அதிர்ஷ்ட எண்கள்: 3, 9