தினபலன்
மேஷம் - 17-03-2023
இன்று குடும்பத்தில் இருப்பவர்களின் செய்கை கள் உங்களது கோபத்தை தூண்டுவதாக இருக்கும். கணவன், மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை ஏற்படும். சிற்றின்ப சுகம் குறையும். பிள்ளைகளுடன் அனு சரித்து செல்வது நல்லது. வாகனங்களில் செல்லும் போதும் பயணங்களின்போதும் கூடுதல் கவனம் தேவை. வேலையில் மாற்றம் உண்டாகலாம். மருத்துவ செலவு உண்டாகலாம். தொழில் வியாபாரத்தில் எதிர்பாராத சிக்கலை சந்திக்க வேண்டி இருக்கலாம். ஆர்டர்கள் மற்றும் பொருட்கள் சப்ளை செய்வதில் கவனம் தேவை. பணவரத்து தாமதப்படலாம்.
அசுபதி: வீண் அலைச்சல் ஏற்படலாம்.
பரணி: தேவையில்லாத பணவிரையம் ஆகலாம்.
கிருத்திகை 1ம் பாதம்: காரிய அனுகூலம் கிடைக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள், நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 7