இன்று கணவன், மனைவிக்கிடையே திடீர் கருத்து வேற்றுமை ஏற்பட்டு நீங்கும். குடும்ப விஷயங்களில் சரியான முடிவுக்கு வர முடியாத தடுமாற்றம் ஏற்படலாம். உறவினர்களுடன் பேசும்போது கவனமாக பேசுவது நல்லது. வாகனங்களில் செல்லும்போதும் பயணங்களின்போதும் கவனம் தேவை.
அசுபதி: குடும்பத்தினர் வேண்டுவதை நிறைவேற்றி வைப்பீர்கள்.
பரணி: உங்கள் மரியாதை உயரும்.
கிருத்திகை 1ம் பாதம்: பழைய கடன்களை அடைத்து வாக்கு நாணயத்தைக் காப்பாற்றி புதிய கடன்களை வாங்கி தொழிலைப் பெருக்கலாம்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம்
அதிர்ஷ்ட எண்: 4, 6