தினபலன்
மேஷம் - 27-05-2023
இன்று பொருளாதார சிக்கல் ஏற்பட்டு நீங்கும். எந்த ஒரு காரியத்திலும் தெளிவான முடிவு எடுக்க முடியாத குழப்பம் ஏற்பட்டு பின்னர் சரியாகும். சொன்ன சொல்லை காப்பாற்றி விடுவீர்கள். அதனால் மதிப்பு கூடும். எதிர்ப்புகளை சமாளித்து முன்னேற எடுக்கும் முயற்சிகள் சாதகமான பலன் தரும்.
அசுபதி: நீண்ட நாளைய ஆசை நிறைவேறும்.
பரணி: மனதிற்கு பிடித்த காரியங்கள் நடக்கும்.
கிருத்திகை 1ம் பாதம்: அனைவரிடமும் சந்தோஷமாகப் பழகுவீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9