தினபலன்
மேஷம் - 28-04-2023
இன்று துணிச்சலாக எதிலும் ஈடுபட்டு பாராட்டு பெறுவீர்கள். எதிலும் தயக்கமோ பயமோ இருக்காது. தந்தையின் உடல்நிலையில் கவனம் தேவை. அவருக்காக செலவு செய்ய வேண்டி இருக்கும். சிலருக்கு இடமாற்றம் உண்டாகலாம். எதிலும் ஒரு வேகம் உண்டாகும். அடுத்தவர் விஷயங்களில் தலையிடும் போது கவனம் தேவை.
அசுபதி: பிள்ளைகள் துணையால் மருத்துவ செலவு ஏற்படலாம்.
பரணி: பேச்சின் இனிமை சாதூரியத்தால் எளிதில் காரியங்கள் கைகூடும்.
கிருத்திகை 1ம் பாதம்: எதிர்காலத்துக்கு உதவக்கூடிய விஷயங்களில் ஆர்வம் உண்டாகும்.
அதிர்ஷ்ட நிறம்: வெளிர் நீலம், மஞ்சள்
அதிர்ஷ்ட எண்கள்: 4, 6