கடகம் - 13-03-2023
இன்று குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் நீங்கி சுமுகமான நிலை காணப்படும். கணவன், மனைவிக்கிடையே மனம் விட்டு பேசி முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். பயணங்களால் செலவு ஏற்படும். துணிச்சலுடன் எதிலும் ஈடுபட்டு காரிய வெற்றி காண்பீர்கள். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். விளையாட்டில் கவனம் செலுத்துவீர்கள்.
புனர்பூசம் 4ம் பாதம்:இன்று திறமையான பேச்சின் மூலம் சாதகமான பலன் கிடைக்கும். எதிலும் தாமத மான போக்கு வீண் அலைச்சல் ஏற்பட லாம். புதிய முயற்சிகளை தள்ளிப்போடுவது நல்லது. எதிர்பார்த்த பணவரத்து இருக்கும். மனமகிழ்ச்சி ஏற்படும்.
பூசம்:இன்று சந்திரன் சஞ்சாரத்தால் தேவையான உதவிகள் கிடைக்கும். பணவரத்து அதிகரிக்கும். ராசியாதிபதி செவ்வாய் சஞ்சாரம் வீண் அலைச்சலை தரும். உழைப்பு அதிகரிக்கும். சனியின் சஞ்சாரத்தால் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படலாம். பயணங்களால் வீண் செலவு உண்டாகும்.
ஆயில்யம்:இன்று தொழில் வியாபாரத்தில் திடீர் தடைகள் ஏற்பட்டு நீங்கும். வாடிக்கையாளர்களை திருப்திபடுத்த கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மிகவும் கவனமாக பணி களை மேற்கொள்வது நல்லது. மேல் அதிகாரிகள் மற்றும் சக ஊழியர்களை அனுசரித்து செல்வது நன்மை தரும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம், வெள்ளை
அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9