கடகம் - 14-03-2023
இன்று நம்பிக்கையுடன் காரியங்களில் ஈடுபட்டு வெற்றி காண்பீர்கள். மற்றவர்களை நம்பி பொறுப்புகளை ஒப்படைப்பதில் கவனம் தேவை. மாணவர்களுக்கு கல்வி தொடர்பான பயணங்கள் செல்ல வேண்டி இருக்கும். சக மாணவர்கள் ஒத்துழைப்பு கிடைக்கும். பகை விலகும். எதிர்ப்புகள் அகலும். அடுத்தவர் செய்யும் நற்காரியங்களுக்கு ஆதரவாக இருப்பீர்கள்.
புனர்பூசம் 4ம் பாதம்:இன்று தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டிகள் குறையும். பழைய பாக்கிகள் வசூலாகும். பணியாட்கள் மூலம் நன்மை ஏற்படும். சாமர்த்தியமான பேச்சின் மூலம் வாடிக்கையாளர்களிடம் நன் மதிப்பை பெறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் நேர்மையாக சிறப்பாக பணிகளை செய்து மேல் அதிகாரிகளிடம் பாராட்டுக்கள் கிடைக்க பெறுவார்கள்.
பூசம்:இன்று உயர் பதவிகளும் கிடைக்க கூடும். குடும்பத்தில் திருமணம் போன்ற சுபகாரியங்கள் நடக்கும். எல்லா வகையிலும் நன்மை ஏற்படும். கணவன் மனைவிக்கிடையே இருந்த மன வருத்தம் நீங்கி மகிழ்ச்சியுடன் காணப்படுவார்கள். பிள்ளைகள் நீங்கள் கூறியதை கேட்டு அதன்படி நடப்பது ஆறுதலை தரும். ஆயில்யம்:இன்று தேவையான உதவிகள் தக்க சமயத்தில் கிடைக்கும். தடைபட்ட காரியங்கள் சாதகமாக முடியும். பணவரத்து அதிகரிக்கும். மாணவர்களுக்கு கல்வியில் இருந்த தடைகள் நீங்கி முன்னேற்றம் காண்பீர்கள். பெற்றோர் ஆசிரியர் பாராட்டும் கிடைக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம், சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 7