
இன்று வெளிநாடு பயணங்களால் பணவரவு அதிகரிக்கும். அரசியலில் உள்ளவர்களுக்கு தைரியம் அதிகரிக்கும். மாணவர்கள் படிப்பில் கவனத்தை செலுத்த வேண்டியது அவசியம். எதிலும் உணர்ச்சிவசப்பட வேண்டாம். கிடைக்கப் பெற்ற பணத்தை தவறான வழிகளில் முதலீடு செய்ய நேரும். ஆகவே மிகுந்த எச்சரிக்கை தேவை.
புனர்பூசம் 4ம் பாதம்: புதிய ஆர்டர்கள் கிடைப்பதில் ஏற்பட்ட சிக்கல்கள் தீரும்.
பூசம்: உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கலாம்.
ஆயில்யம்: சக ஊழியர்களின் ஒத்துழைப்பால் பணிகளை சிறப்பாக செய்து முடிப்பீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம், வெள்ளை
அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9