தினபலன்
கடகம் - 18-03-2023
இன்று வாகனம் மூலம் செலவு உண்டாகலாம். பயணசுகம் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் இருப்பவர்கள் கூடுதல் செலவை சந்திக்க நேரிடும். புதிய ஆர்டர்கள் கிடைப்பது தாமதப் படும். தேவையான பணஉதவி கிடைக்கலாம். வாடிக்கையாளர்களிடம் கடுமையான பேச்சை தவிர்ப்பது நல்லது. லாபம் எதிர்பார்த்ததை விட குறையலாம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கவனமாக பணிகளை மேற்கொள்வது நல்லது. குடும்பத்தில் கலகலப்பு குறையும். எதிலும் வெறுப்பும் திடீர் கோபமும் வரலாம்.
புனர்பூசம் 4ம் பாதம்: பணவரத்து எதிர்பார்த்தபடி திருப்திகரமாக இருக்கும்.
பூசம்: காரிய வெற்றிக்கு தேவையான உதவிகள் கிடைக்கும்.
ஆயில்யம்: விளையாட்டு போட்டிகளில் பங்கேற்கும் போது கவனம் தேவை.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்: 1, 6, 9