தினபலன்
கடகம் - 20-03-2023
இன்று குடும்பத்தில் இருப்பவர்கள் எதையும் வெளிக்காட்டாமல் உங்களுடன் இன் முகம் கொடுத்து பேசுவார்கள். கணவன், மனைவிக்கிடையே இருந்த வருத்தங்கள் நீங்கும். பிள்ளைகள் விஷயத்தில் அதிக அக்கறை காட்டுவீர்கள். அக்கம்பக்கத்தி னரிடம் அனுசரித்து செல்வது நல்லது. திடீர் மனஸ்தாபம் ஏற்படலாம். பிள்ளைகள் கல்விக்கான செலவு அதிகரிக்கும். அத்துடன் தேவையானவற்றையும் வாங்கி தருவீர்கள். அடுத்தவர்கள் பொறுப்புகளை ஏற்காமல் தவிர்ப்பது நல்லது. எதிர்பாராத செலவுகள் வரலாம்.
புனர்பூசம் 4ம் பாதம்: குடும்பத்தில் இருப்பவர்களுடன் அனுசரித்து செல்வது நல்லது.
பூசம்: செலவு செய்ய வேண்டி இருக்கும்.
ஆயில்யம்: கணவன் மனைவிக்கிடையில் திடீர் இடை வெளி ஏற்படலாம்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, பச்சை
அதிர்ஷ்ட எண்: 2, 9