தினபலன்
கடகம் - 29-01-2023
இன்று எதிலும் கவனமாக இருப்பது நன்மை தரும். தனாதிபதி சூர்யன் சஞ்சாரம் பணவரத்தை அதிகப்படுத்தும். பேச்சின் இனிமை சாதூரியம் இவற்றால் எடுத்த காரியம் கைகூடும். புண்ணிய காரியங்களில் நாட்டம் அதிகரிக்கும். தந்தையுடன் அனுசரித்து செல்வது நல்லது. பூர்வீக சொத்துக்கள் மூலம் வரவேண்டிய லாபம் தாமதப்படும்.
புனர்பூசம் 4ம் பாதம்: வெளிநாடுக்கு ஏற்றுமதி செய்வோருக்கு புதிய ஆர்டர்கள் வந்து சேரும்.
பூசம்: புதிய இட ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும்.
ஆயில்யம்: தொழிற்சாலைகள் வைத்திருப்போருக்கு நல்ல லாபம் கிடைக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 9