தினபலன்
மகரம் - 01-02-2023
இன்று தொழிலில் உங்கள் வியாபாரத்தை விருத்தி செய்து கொள்வீர்கள். அரசாங்கம் மூலம் நடக்க வேண்டிய காரியங்களில் சாதகமான நிலை காணப்படும். போட்ட திட்டங்களுக்கு ஏற்பட்டுக் கொண்டிருந்த தன வருவாய் சிக்கல்களை மெல்ல மெல்ல சமாளிப்பீர்கள். கொடுக்கல் வாங்கலில் இருந்த சுணக்க நிலை மாறும். கல்வியில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை அதிகரிக்கும்.
உத்திராடம் 2, 3, 4 பாதங்கள்: பிள்ளைகள் கல்வியில் அக்கறை காட்டுவீர்கள்.
திருஓணம்: மனத்துணிவு அதிகரிக்கும்.
அவிட்டம் 1, 2 பாதங்கள்: பணவரத்து எதிர்பார்த்தபடி திருப்திகரமாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம், இளஞ்சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்: 2, 5